Friday, January 1, 2010

தமிழில் குழந்தைப் பெயர்கள்


உலகின் தொன்மையான மொழியான தமிழின் சிறப்பினை, உலகமே போற்றுகின்றது; பெருமை செய்கின்றது. ஆனால் தாய்த்தமிழகத்தில் தமிழின் மீது தமிழர் காட்டும் அக்கறை மிகுந்த கவலை தருவதாக உள்ளது. இன்றைய சூழலில் 100-க்கு 20 விழுக்காடு தமிழர்களின் பெயர் மட்டுமே தூய தமிழாய் உள்ளது.
தமிழகத்தில்பெயரளவில் தமிழ்என கொதிக்கின்றேன்!அடடா!தமிழரின்பெயரிலும் தமிழ் இல்லை!
உலகின் அனைத்து மொழியின மக்களும் தத்தமது மொழிகளில் பெயர் கொள்கின்றனர். ஆனால், தமிழர்கள் மட்டும் வடமொழியாய், அரபியாய், இலத்தீனமாய், பாரசீகமாய் பெயர் கொண்டு அடையாளம் இழக்கின்றனர். இந்த அவலநிலை இன்னும் நீடிக்கலாமா? உலக மொழிகளுக்கெல்லாம் வேர் மொழியான தமிழுக்கு அணி செய்யும் வகையில், குழந்தைகளுக்கும், நிறுவனங்களுக்கும் தமிழில் பெயர் சூட்டிட உறுதி ஏற்போம்!

No comments:

Post a Comment