Friday, May 21, 2010

Google செய்திகளைப் பற்றி

Google செய்திகள் உலகெங்கும் உள்ள எண்மொழி செய்தி ஆதாரங்களிலிருந்து தலையங்கங்களை சேகரித்து, ஒரே மாதிரியான செய்திகளை குழுமித்து, அவற்றை படிப்பவரின் தனிப்பட்ட விருப்பத்துக்கேற்ப திரையில் காண்பிக்கும், ஒரு கணினி-தருவித்த செய்தித் தளம் ஆகும்.

பொதுவாக, செய்தி படிப்பவர்கள் முதலில் ஒரு பதிப்பைத் தேர்ந்தெடுத்து, பிறகு அதில் தங்களுக்கு விருப்பமான தலையங்கங்களைத் தேடுவர். எங்கள் படிப்பாளர்களுக்கு மேலும் பிரத்தியேகப்படுத்தப்பட்ட தேர்வுகளையும், தேர்ந்தெடுப்பதற்கு பல வகையான கண்ணோட்டங்களையும் வழங்கும் நோக்கத்தோடு, நாங்கள் அதை சிறிது வித்தியாசமாகச் செய்கிறோம். Google செய்திகளில் நாங்கள் ஒவ்வொரு செய்திக்கும் பல செய்தித் தொகுப்புகளுக்கான இணைப்புகளை வழங்குகிறோம், அதனால் நீங்கள் முதலில் உங்களுக்கு விருப்பமான துறையை முடிவு செய்து கொண்டு, பின்னர் நீங்கள் படிக்க விரும்பும் ஒவ்வொரு செய்திக்குமான பதிப்பாளரின் தொகுப்பைத் தேர்ந்தெடுக்கலாம். நீங்கள் படிக்க விரும்பும் தலையங்கத்தின் மீது க்ளிக் செய்தால், அந்த செய்தி பதிப்பிக்கப்பட்டிருக்கும் தளத்துக்கு நேரடியாகச் செல்வீர்கள்.

ஒரு செய்தி இணையத்தளத்தில் எவ்வளவு அடிக்கடி, எந்தெந்த தளங்களில் தோன்றுகின்றன, என்பது போன்றவற்றை மதிப்பிடும் கணினிகளால், எங்களது செய்தித் தொகுப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு மதிப்பிடப்படுகின்றன. இதனால், செய்திகள் அரசியல் கண்ணோட்டத்தின் அடிப்படையிலோ அல்லது கொள்கைகளின் அடிப்படையிலோ இல்லாமல் பகுக்கப்படுகின்றன, நீங்கள் எந்த ஒரு செய்தியையும் பல வகையான கண்ணோட்டங்களில் இருந்து தேர்ந்தெடுக்கலாம். பல்வேறு ஆதாரங்களைச் சேர்ப்பதன் மூலமும், எங்களது தொழில்நுட்பத்தை செம்மைப்படுத்துவதன் மூலமும், மேலும் சில பகுதிகளில் படிப்பாளர்களுக்கு Google செய்திகளை வழங்குவதன் மூலமும், Google செய்திகளை மேம்படுத்துவதை தொடர்வோம்.

தனிச்சிறப்புகள்

பிரத்தியேகப்படுத்தப்பட்ட செய்தி: தினமும் பதிப்பிக்கப்படும் எல்லாச் செய்திகளையும் எவராலும் படிக்க முடியாது, அதனால் உங்களது விருப்பங்களுக்கேற்ற செய்திகளை உங்களுக்கு காட்டவென ஒரு பக்கத்தை ஏன் நீங்கள் ஏற்படுத்தக்கூடாது? மேலும் அறிக.

தெரிவிப்புகள்: உங்களுக்கு விருப்பமான எந்த தலைப்பிலும் வாரந்தோறும், தினமும் அல்லது உடனுக்குடன் மின்னஞ்சல் தெரிவிப்புகளைப் பெற நீங்கள் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் அறிக.

உங்களது மொபைல் ஃபோனுக்கான செய்திகள்: நீங்கள் ஒரு மொபைல் டேட்டா ப்ளான் வைத்திருந்தால், உங்கள் மொபைல் ஃபோனிலிருந்தே Google செய்திகளின் ஒரு பிரத்தியேக பிரதியை நீங்கள் கிடைக்கப்பெறலாம். மேலும் அறிக.

ஃபீட்கள்: உங்களுக்கு விருப்பமான ஃபீட் ரீடரில் RSS அல்லது ஆட்டம் ஃபீட்களுக்கு சந்தா செலுத்துவதன் மூலம், நீங்கள் Google செய்திகளின் பல்வேறு பகுதிகளின் புதுப்பிக்கப்பட்ட பிரதிகளையோ அல்லது Google செய்திகளின் தேடல் முடிவுகளையோ பெறலாம். மேலும் அறிக.

செய்தி ஆவணக்காப்பகத்தில் தேடல்: 200 வருடங்களுக்கும் முந்தைய சரித்திர ஆவணங்களிலிருந்து தகவல்களை தேடி ஆராயுங்கள். மேலும் அறிக.

மேலும் தகவல்

மேலும் தகவல்களைத் தேடுங்கள், உங்கள் கேள்விகளுக்கு பதில்களைத் தேடுங்கள், எங்களது உதவி மையப் பக்கங்களில் உங்கள் பரிந்துரைப்புகளை எங்களுக்கு அனுப்புங்கள்.

நீங்கள் ஒரு செய்திப் பதிப்பாளராக இருந்தால், உங்களது கேள்விகளுக்கான பதில்களையும் பயன்படக்கூடிய டூல்களையும் எங்கள் பதிப்பாளர்களுக்கான உதவி என்னும் பகுதியில் காணுங்கள்

பாகிஸ்தானில் யூ டியூப் மற்றும் பேஸ்புக் இணைய தளத்தை பயன்படுத்த தடை

பாகிஸ்தான்: பாகிஸ்தான் தகவல் தொழில்நுட்ப அதிகாரிகள் நேற்று நள்ளிரவு முதல் யூ டியூப் என்னும் இணைய தளத்தை பாகிஸ்தானில் தடை செய்துள்ளனர். இஸ்லாமிய விரோத வீடியோக்கள் இடம் பெற்றுள்ளதாகக் கூறி யூ டியூப் இணையத் தளத்துக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது. அந்த இணையத் தளத்தை பாகி்ஸ்தானில் பார்க்க முடியாதபடி முடக்கியுள்ளது. இந்நிலையில் இந்த இணைய தளத்தில் வெளியான தடைசெய்யப்பட்ட தகவல் என்னவென்று குறிப்பிட பாகிஸ்தான் தகவல் தொழில்நுட்ப அதிகாரிகள் மறுத்து விட்டனர். இதை எதிர்த்து சில வழக்கறிஞர்கள் வழக்குத் தொடர்ந்ததையடுத்து பேஸ்புக் இணையத் தளத்தை வரும் 31ம் தேதி வரை முடக்குமாறு லாகூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அந்த இணையத் தளத்துக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்தது. தனது இணையத்தில் இடம் பெற்ற அந்தப் பக்கங்கள் குறித்து விசாரணை நடத்தி வருவதாக பேஸ்புக் அறிவித்துள்ளது. 2008ம் ஆண்டில் யூ டியூப் இணையத்தை ஒருமுறை பாகிஸ்தான் முடக்கியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த இணைய தளத்தை தொடர்ந்து பாகிஸ்தானில் பயன்படுத்தலாமா என்பது பற்றி தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்

10-ம் வகுப்பு, மெட்ரிக் தேர்வு முடிவுகள் மே 24 அல்லது 26ம் தேதி வெளியாகும்

சென்னை: பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 24 அல்லது மே 26ம் தேதி வெளியாகும் என்று தெரிகிறது. கடந்த மார்ச் 23ம் தேதி தொடங்கிய பத்தாம் வகுப்பு தேர்வை 8.56 லட்சம் பேரும்,​​ தனித் தேர்வர்களாக 99,000 பேரும் எழுதினர்.​ ஏப்ரல் 9ம்ம் தேதி தேர்வுகள் முடிவடைந்தன. விடைத்தாள் திருத்தும் பணி முடிவடைந்து,​ தற்போது மதிப்பெண் சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. இதனால், ​​ எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் வரும் திங்கள்கிழமை அல்லது புதன்கிழமை வெளியாக வாய்ப்புள்ளதாக அரசுத் ​தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

Tuesday, May 11, 2010

Tamilnadu State Board Plus Two Examination Results 2010

Websites on which Plus Two results 2010 of TamilNadu Board Exam will be available:
http://www.tnresults.nic.in/
http://www.squarebrothers.com/
http://results.sify.com/
http://indiaresults.com/
http://www.dge1.tn.nic.in/
http://www.dge2.tn.nic.in/
http://www.dge3.tn.nic.in/
http://www.tngdc.in/
http://www.collegesintamilnadu.com/
http://www.classontheweb.com/
http://www.schools9.com/
http://www.chennaivision.com/
http://www.mygaruda.com/
http://www.tnagar.com/
http://www.indiacollegefinder.com/
http://www.chennaionline.com/
http://www.nakkeeran.com/
http://www.getyourscore.in/
http://www.examresults.net/
http://results.webdunia.com/
http://www.jayanews.in/
http://www.findchennai.com/

http://dge1.tn.nic.in/
TamilNadu Exam Results, Board Exam Results 2010 Tamil Nadu

Sunday, May 9, 2010

அகல் விளக்கு சொல்லும் அழகான தத்துவம்!


கார்த்திகை மாதம் வந்தாலே பெரும்பாலான வீடுகளின் மாடப் பிறையில் மண்ணால் ஆன அகல் விளக்குகள் சுடர் விட்டு எரிந்துகொண்டிருக்கும். அத்துடன் கார்த்திகை தீபம் வரும் நாள் அன்று மண்ணால் ஆன புதிய அகல் விளக்குகள் வாங்கி ஏற்றி வைப்பர். அத்துடன் வருடா வருடம் புதிய மண் விளக்கு வாங்கும் பழக்கமும் உண்டு.

வெள்ளி, வெங்கலம், ஐம்பொன், பித்தளை என்று பலவற்றால் ஆன விளக்குகள் இருந்தாலும், கார்த்திகை மாதம் வந்தால் மண்ணால் ஆனவற்றிற்கு தனி மவுசு உண்டு! ஏன் தெரியுமா?

அவை நம் வாழ்க்கையின் தத்துவத்தை அழகாய் எடுத்துச் சொல்லிக் கொண்டிருப்பதால்! படைப்பில் உயர்ந்தவனாகக் கருதப்படும் மனிதனுக்கு மட்டுமே ஆறாம் அறிவு உள்ளது. அறிவாற்றல் அவன் எண்ணங்களை வளப்படுத்துகிறது. அதாவது உடலும் மனமும் நல்ல முறையில் கை கோத்துக்கொள்ளும் போது மனித வாழ்வு உயர்கிறது. இந்த இரண்டு தத்துவத்தையும் தன்னுள் அடக்கிக் கொண்டுள்ளது, சுடர் விட்டு எரியும் மண் அகல் விளக்கு.

மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குப் போல், மனித வாழ்வும் மண்ணில் தான் தொடங்குகிறது. கை தவறியோ, காற்றிலோ தள்ளப்பட்ட விளக்குகள் உடைந்து விடுகின்றன. அது போலத்தான் மனித வாழ்வும் நிலையில்லாதது. மண்ணில் ஆரம்பிக்கும் வாழ்வு, மண்ணிலேயே முடிகிறது. இதைப் பின் வரும் பாடல் வரிகள் அழகாக விளக்குகின்றது.

'நந்தவனத்திலோர் ஆண்டி,
அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி, அதைக்
கூத்தாடி கூத்தாடிப் போட்டுடைத்தான்டி'

நம் வாழ்க்கை, ஒரு சக்கரம் போன்றது. அதைப் போலத்தான் அகல் விளக்கும் வட்ட வடிவமாக உள்ளது. ஆனாலும் தனக்கு என்று கொடுக்கப்பட்ட ஆயுள் காலத்திற்குள் மனிதன் சாதனைகளைச் செய்ய வேண்டும். நல்லவனாக வாழ வேண்டும் என்பதைச் சுடர் விட்டு எரியும் தீச்சுடர் உணர்த்துகிறது.

அகல் விளக்கின் மூக்கு போன்ற பகுதி, மனித அறிவின் ஆன்ம சக்தியின் வெளிப்பாட்டைக் குறிக்கிறது. ஆன்ம சக்தி வெளிப்படும் போது மனிதன் சாதனையாளர் என்ற பட்டியலில் இணைந்துகொள்கிறான். சுடர் விட்டு எரியும் தீபம், ஒளியைத் தன்னுள் அடக்கிக்கொள்வதில்லை. அதனைப் பிறருக்கு வழிகாட்டியாக ஆக்குவது போல் மனிதனும் தன் அறிவைப் பிறரின் நலனுக்கு, சமூக நலத்துக்குப் பயன்படுத்தித் தன் அறிவு மற்றும் அன்பின் எல்லையை விசாலமாக ஆக்க வேண்டும். இந்தக் கருத்தை உள்ளடக்கித்தான் அகல் விளக்கு என்று அழைக்கப்படுகிறது.

அகல் என்ற வார்த்தைக்கு தமிழ் அகராதி தரும் பல பொருள்களில் ஒரு பொருள் என்ன தெரியுமா? விசாலித்தல். அதாவது விரிதல்! அத்துடன் மனித எண்ணங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் சுடர் தெளிவாக நமக்கு காட்டுகிறது. எந்த நிலையிலும் விளக்கின் சுடரானது மேல் நோக்கியே எரியும். அது போல் மனிதனும் எப்போதும் உயர்வான எண்ணங்களை வளர்த்துக்கொள்வதோடு அதற்காகப் பாடுபட்டால் உயர்வு என்பது உறுதி. விளக்கில் ஊற்றப்படும் எண்ணெயும் ஒரு தத்துவத்தை விளக்குகிறது. ஊற்றிய உடன் எண்ணைய் எங்கும் வியாபித்து எல்லா இடங்களையும் தொடுவது போல், மனிதனும் பிரபஞ்சம் எங்கும் உள்ள இறைவனின் கருணையை உணர வேண்டும்.

ஜோதிட ரீதியாகவும் கார்த்திகை மாதம் சூரியன் விருச்சிக ராசியில் சஞ்சரிப்பார். இந்த ராசியின் அதிபதி யார் தெரியுமா? செவ்வாய். செவ்வாய்க்குப் பூமி புத்திரன், பௌமன் என்று ஒரு பெயரும் உண்டு. பூமிக்கு அதிபதியான செவ்வாயின் ஆதிக்கத்தின் கீழ் வரும் விருச்சிக ராசியில் மண்ணால் ஆன அகல் விளக்கினை வைத்துப் பண்டிகை கொண்டாடுவது பொருத்தம்தானே?

எனவே இந்த வருடம், கார்த்திகை மாதம், அகல் விளக்கு ஏற்றும் போது நம் வாழ்க்கைத்
தத்துவத்தை உணர்ந்து செயல்பட்டால் நம் வாழ்வும் அழகாகச் சுடர் விடும்!

திருமதி காயத்ரி பாலசுப்ரமணியன்

அனுமன்


அனுமன் என்னும் பெயருக்கே பல மூல காரணங்கள் உண்டு. முகவாய்க்கட்டை சற்றே நீண்டு சாதாரணமான மனிதர்களிலிருந்து மாறுபட்ட தோற்றம் உடையவன் என்பது ஒரு காரணம். 'ஹனு' என்றால் முகவாய்க்கட்டை என்பது பொருள். இந்திரனின் தாக்குதலால் அனுமனின் அழகிய முகவாய்க்கட்டை சேதமடைந்து அதன் தன்மை மாறியதினால் இப் பெயர் ஏற்பட்டது என்பதை இலக்கண விளக்கங்கள் தவறு என்கின்றன. அழகிய வாய்ப்புறம் கொண்டவனைத்தானே ஹனுமன் எனக் குறிப்பிட வேண்டும் என்பது அதன் வாதம்.

ஹனுமன் வானர இனத்தைச் சேர்ந்தவனல்ல - மனித இனத்தைச் சார்ந்தவன்தான். அவனுடைய இனத்திற்கும் ஆரியர்களுக்கும் அதிக வேற்றுமைகள் இல்லை என்கின்றனர் மனித இயல் ஆய்வாளர்கள்.

அஞ்சனையின் மகன் என்பதால் ஆஞ்சநேயன் எனவும், வாயு பகவானின் மகன் என்பதால் வாயு புத்திரன் எனவும், தக்க சமயத்தில் சஞ்சீவி மலையை ஏந்தி வந்து இளைய பெருமாளாகிய லக்குவனைக் காத்ததால் சஞ்சீவைய்யா, சஞ்சீவிராயன் எனவும் பல பெயர்களால் அனுமன் அழைக்கப்படுகிறான்.

நமக்குத் தேவையான ஆன்மபலம், மனோபலம், புத்திபலம், தேகபலம், பிராணபலம், சம்பத் பலம் என்னும் இந்த ஆறு பலங்களையும் நமக்குப் பெற்றுத் தர வல்லதுதான் ஸ்ரீ ஆஞ்சநேயரின் அருள்.

'ஸ்ரீ ஆஞ்சநேயப் பிரபாவம்' என்னும் வார்த்தைகள் ஸ்ரீ ராமபிரானாலேயே சொல்லப்பட்ட ஒன்று. ஆம். இதை ஆயிரம் நாவு படைத்த ஆதிசேக்ஷனாலும் சொல்ல முடியாது என்பர்.

பஞ்ச பூதங்களையும் வசப்படுத்தியவர் ஆஞ்சநேயர் என்பர். புத்திர பாசத்தினால் வாயுவையும், ஆகாயத்தில் பறந்து பெருங்கடலைத் தாண்டியதால் ஆகாயம், சமுத்திரம் இரண்டையும், பூமியைப் பிறப்பிடமாகக் கொண்டதுடன் பூமாதேவியின் மடியில் அவதரித்த சீதாதேவியின் பூரண அருள் பெற்றதால் பூமியையும் வசப்படுத்தியவர் இவர். இராவணனின் ஆணைப்படி இவர் வாலில் வைக்கப்பட்ட நெருப்பினால் இலங்கையையே அழித்தவர். நெருப்பும் இவர் வசமானது. இதனால் 'அஞ்சிலே ஒன்று பெற்றான்' என்கிறார் கம்பர்.

பஞ்ச பூதங்களை மட்டுமன்றி பஞ்சேந்திரியங்களையும் வசப்படுத்திய பெருமை இவருக்கு உண்டு. ஓயாமல் எப்போதும் சலனப்படும் தன்மை கொண்டது வானர இனம். இதில் தோன்றியவரான அனுமன் தன் இயல்பிலிருந்து மாறி இயற்கை இடையூறுகளை வென்றதுடன் ஓயாமல் பக்தி பூண்டதால் இவரை ஜிதேந்திரியன் என்றும் குறிப்பிடுவர்.

ஸ்ரீ ஆஞ்சநேயரை வழிபடுவோருக்குப் பக்தியுடன் புத்தியும், ஞானமும், வீரமும், வினயமும் சேர்ந்து வருவதுடன் காம குரோத எண்ணங்கள் அழியும்.

அனுமனிடம் சிக்கி அலைக்கழிக்கப்பட்டவர்களும் உண்டு. அதில் ஒருவர்தான் சனி பகவான். அவர் ஒருமுறை வாயு புத்திரனிடம் வந்து ''நான் உன்னை இரண்டரை மணி நேரம் பிடிக்க வேண்டும். உன் உடலில் எந்தப் பாகத்தில் பிடிக்க வேண்டுமென்பதைச் சொல். மற்றவர்கள் என்றால் எச்சரிக்கை ஏதுமின்றிப் பிடித்து ஆட்டுவேன். நீ இராம தூதன் என்பதால்தான் உன்னிடம் முன் கூட்டியே தெரிவிக்கிறேன்'' என்றார்.

சனி பகவான் மாருதியைத் தேடி வந்தபோது அவர் சேது பந்தன வேலையில் ஈடுபட்டிருந்தார். ''கடமையைச் செய்ய வருபவர்களைத் தடுத்தல் தவறு. நீ என் தலை மீது அமர்ந்து கொள்ளலாம்'' என மாருதி கூற இ சனி பகவானும் அப்படியே செய்தார். ஆஞ்சநேயன் ஸ்ரீ இராம ஜபம் செய்தபடியே மலைகளையும், மரங்களையும் தலையின் மீது அடுக்கியபடியே அணை கட்டுமிடத்திற்கு வந்தார். அனுமன் ஏற்றிய சுமைகள் அவர் தலை மீதிருந்த சனி பகவானின் மீது ஏற்றப்பட்டதால், இதன் பாரம் தாங்க முடியாமல் தன்னை இறக்கிவிடும்படி அவர் வேண்ட - இரண்டரை மணி நேரத் துன்பத்துக்குப் பிறகுதான் அனுமன் அவரை இறக்கி விட்டார். இ அதுவரை பாரம் சுமக்கும் வேலையைத் தொடர்ந்தார். ''இனி உங்கள் பக்தர்களைக் கூட நான் தொட மாட்டேன்'' என அனுமன் இருந்த திசைக்கே ஒரு கும்பிடு போட்டுச் சென்றார் சனி பகவான். இதனால்தான் சனியினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு ஆஞ்சநேயருக்குப் பூஜைகள் செய்து துளசிமாலை சாற்றுவர்.

நம் புராணங்களில் அனுமனுக்கு என்றுமே தனியிடம் உண்டு. சைவம், வைணவம் இரண்டிலுமே ஹனுமன் பற்றி பல கதைகள் உண்டு. அவரை சிவபெருமானின் அம்சம் என்பர்.

தசரதன் புத்திர பாக்கியம் வேண்டி யாகம் செய்து அதன் பிரசாதத்தைத் தன் மனைவிகளிடம் தந்த போது பட்டத்து ராணியான கெளசலையிடமிருந்த பிரசாதத்தில் சிறிதளவை ஒரு கழுகு கொத்திச் சென்று குழந்தை வரம் கேட்டுத் தவமிருந்த அஞ்சனையின் அருகில் இட - அது வாயு பகவானின் அருளால் அவளிடம் சேர்ந்தபோது சிவபெருமான் அவள் முன் தோன்றி அதை உண்ணும்படி பணித்தார். அஞ்சனை அதனை உண்டதன் பலனாக அனுமன் அவதரித்தார் என்று கூறப்படுகிறது.

வைணவ சம்பிரதாயத்தில் அனுமன் சிறிய திருவடியாகத் திருமாலின் சேவகனாகச் சித்திரிக்கப்படுகிறான்.

வைதேகி தேசிகன்