Thursday, December 31, 2009

செயற்கை ரத்த‌ம், தோல் உருவா‌க்க முய‌ற்‌சி‌யி‌ல் விஞ்ஞானிகள்


விப‌த்து ம‌ற்று‌ம் ப‌ல்வேறு நோ‌ய்க‌ளினா‌ல் தா‌க்க‌ப்ப‌ட்ட ம‌னிதனு‌க்கு ‌மிகவு‌ம் அவ‌சியமாகு‌ம் ம‌னித உறு‌ப்‌புகளான தோ‌ல்‌, ர‌த்த‌ம், எலு‌ம்பு ஆ‌கியவ‌ற்‌றை, உடல் பாகங்களை அமைக்க உதவும் திசுக்களை‌க் கொ‌ண்டு செயற்கையாக உருவாக்கு‌ம் முய‌ற்‌சி‌யி‌ல் இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானிகள் ஈடுபட்டு இருக்கிறார்கள்.பெரு‌ம்பாலான ‌விப‌த்துக‌ளினாலு‌ம், ப‌ல்வேறு நோ‌ய்களாலு‌ம் ம‌னித உட‌லி‌ல் பா‌தி‌க்க‌ப்படுவது பெரு‌ம்பாலு‌ம் எலு‌ம்பு, ர‌த்த‌ம், தோ‌ல் போ‌ன்ற பகு‌திகளாக உ‌ள்ளன.இவ‌ற்றை ச‌ரி செ‌ய்ய வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌ல் மா‌ற்று எலு‌ம்பு, ர‌த்த‌ம், தோ‌ல் இவை‌த் தேவை‌ப்படு‌கிறது. இவ‌ற்றை தானமாக‌ப் பெ‌ற்று ச‌ரி செ‌ய்ய‌ப்ப‌ட்டாலு‌ம், இத‌ன் தேவை ‌மிக அ‌திகமாக உ‌ள்ளது. தேவையை‌ப் பூ‌ர்‌த்‌தி செ‌ய்ய வே‌ண்டுமானா‌ல், செய‌ற்கையாக உ‌‌ற்ப‌த்‌தி செ‌ய்ய வே‌ண்டியது அவ‌சியமா‌‌கிறது.எனவே இப்படி உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக ரத்தம், தோல், எலும்பு ஆகியவற்றை செயற்கையாக உருவாக்குவதற்கான முயற்சியில் இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானிகள் ஈடுபட்டு இருக்கிறார்கள்.லண்டனில் உள்ள பல்கலைக்கழக கல்லூரியில் ராபர்ட் பிரவுன் தலைமையிலான விஞ்ஞானிகள் இது தொடர்பான ஆராய்ச்சியை மேற்கொண்டு இருக்கிறார்கள். மனித உடல் எடையில் 25 சதவீதம் கல்லகன் என்ற புரதச்சத்து நிறைந்து உள்ளது. இதில் இருந்து தண்ணீரை எடுத்து அதன் மூலம் மனித உடல் திசுக்களை உற்பத்தி செய்யும் வழிமுறையை அந்த விஞ்ஞானிகள் உருவாக்கி இருக்கிறார்கள்.இந்த திசுக்களில் ஒரு பகுதியை கொண்டு தான் தோல், எலும்பு, விழி வெண் படலம் ஆகியவை உருவாகின்றன.தோல், ரத்தம், எலும்பு விழி வெண்படலம் ஆகியவற்றை உருவாக்குவதற்கான முயற்சியில் விஞ்ஞானிகள் வெற்றி அடைந்து வருகிறார்கள். இந்த பாகங்கள் இன்னும் ஒரு ஆண்டு காலத்தில் மருத்துவரீதியான பரிசோதனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.திசுக்களை தயாரிப்பதற்கான கருவி சிறிய அளவில் மேஜையில் வைத்து கொள்ளக்கூடிய அள‌விலேயே இருக்கும். இதன் மூலம் உடல் உதிரிப்பாகங்களை சில நிமிடங்களில் தயாரிக்க முடியும். இந்த உற்பத்தியில் கேம்பிரிட்ஜ்ஜில் உள்ள ஆட்டோமேஷன் பார்ட்னர்ஷிப் என்ற நிறுவனம் ஈடுபட்டு உள்ளது.

நாம் ஒவ்வெருவரும் வாழ்வில் ஒரு முறையாவது ரத்த தானம் செய்வோம்
June 14 உலகம் முழுவதும் ரத்த தான தினமாக உலக சுகாதார அமைப்பின் மூலம் கடைபிடிக்க படுகிறது . ரத்த பிரிவுகளான A, B,O கண்டுபிடித்த கார்ல் லண்டிச்டைனர் அவர்களின் பிறந்த நாளான அன்று ரத்த தான தினமாக கடைபிடிக்கப்படுகிறது .

ரத்த தானம் என்பது நம்மால் இன்னொருவருக்கு ரத்தம் கொடுப்பதாகும் விபத்தில் அடிபட்டவர்களுக்கும் அறுவை சிகிச்சை செய்பவர்களுக்கும் ரத்தம் வெளியேறும் போது அவர்கள் உயிர்வாழ ரத்தம் தேவை படும் . ரத்த தானம் செய்பவர்களை கவுரவிக்கும் விதமாக இந்த நாள் கடை பிடிக்கப்படுகிறது . நாம் ஆபத்தில் இருப்பவர்களுக்கு ரத்தம் கொடுக்கும் போது நம்மால் ஒரு உயிர் வாழ்கிறது .
பெற்றோர்கள் மத்தியில் பிள்ளைகள் ரத்தம் கொடுக்கும் போது ரத்தம் கொடுப்பவர்களின் உடல் நிலை பலவீனம் அடையும் என்ற ஒரு தவறான எண்ணங்கள் காணப்படும் . ஆனால் ஒரு மனிதனின் உடலில் ஐந்து முதல் ஆறு லிட்டர் ரத்தம் வரை காணப்படும் அதில் முன்னூறு முதல் முன்னூற்று ஐம்பத்து மில்லி லிட்டர் ரத்தம் கொடுப்பதால் உடல் நிலை பலவீனம் அடையாது . மனித உடலில் ரத்தம் சுரந்து கொண்டே இருக்கும் . ஒரு முறை ரத்தம் கொடுத்தால் அந்த ரத்த குறுகிய காலத்தில் நமது உடல் சமன் செய்து விடும் .
மருத்துவர்கள் ஆலோசனை படி ஒரு திடகாத்திரமான மனிதன் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ரத்தம் கொடுக்கலாம் . ரத்தம் கொடுக்கும் போது நம்முடைய ரத்தம் பரிசோதனை செய்யப்படும் . இப்படி பரிசோதனை செய்வதால் நமக்கு ரத்தத்தில் நோய்கள் இருந்தால் கூட கண்டு பிடித்து சரி செய்து விடலாம் . ரத்த தானம் செய்வதால் ரத்தம் கொடுத்த நமக்கு மனதளவில் ஒரு மகிழ்ச்சி ஏற்படும் . ரத்தம் பெற்று கொண்டு ஆபத்து நிலையிலிருந்து மீண்ட அவர்களின் சந்தோஷமும் நம் வாழ்க்கையில் மிக பெரிய அனுக்கிரகமாகவும் இருக்கும் .
பல தொண்டு நிறுவனங்கள் ரத்த தானம் கொடுப்பவர்களை ஊக்குவிப்பதோடு ரத்தம் தேவை படுவோருக்கும் ரத்தம் ஏற்பாடு செய்யும் மிக பெரிய மனிதாபி மான பணியை செய்கின்றன . நாம் ஒவ்வெருவரும் வாழ்வில் ஒரு முறையாவது ரத்த தானம் செய்வோம் அனைவரின் வாழ்வையும் வசந்தமாக்குவோம் . இந்த ரத்த தான தினத்தில் நாம் ரத்த தானம் செய்வதை உறுதியெடுத்து கொள்வோம் .

மனித ரத்தம் பயனுள்ள தகவல்கள்


ரத்தத்தின் நிறம் ஏன் சிவப்பாக உள்ளது?
ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் உள்ளே “ஹீமோகுளோபின்’ என்ற வேதிப் பொருள் உள்ளது. இந்த வேதிப்பொருள் தான் ரத்தத்துக்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது. ஹீமோகுளோபின்தான் உடலில் உள்ள அனைத்துச் செல்களுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால் ரத்த சோகை நோய் (Anemia) ஏற்படும். ரத்த சோகை, ரத்த இழப்பு ஏற்படும்போது ரத்த சிவப்பு அணுக்களைச் செலுத்துவார்கள்.ரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் எவ்வளவு?
ரத்தச் சிவப்பு அணுக்களின் ஆயுள் நான்கு மாதங்கள். ரத்தச் சிவப்பு அணுக்களின் முக்கிய வேதிப்பொருளான ஹீமோகுளோபின் உற்பத்திக்கு இரும்புச் சத்து தேவை. கீரைகள், முட்டைக்கோஸ், முட்டை, இறைச்சி ஆகியவற்றில் இரும்புச் சத்து அதிகம். இவற்றை உணவில் தினமும் சேர்த்துக்கொண்டால் ரத்த சோகை வராது.
ரத்த வெள்ளை அணுக்களின் வேலை என்ன?
ரத்த வெள்ளை அணுக்களை படை வீரர்கள் என்று அழைக்கலாம். ஏனெனில் உடலுக்குள் நுழையும் நோய்க் கிருமிகளை முதலில் எதிர்த்துப் போடுபவை ரத்த வெள்ளை அணுக்களே. இவை நோய் எதிர்ப்புச் சக்தியின் முக்கிய ஆதாரம்.
ரத்தத்தில் உள்ள “பிளேட்லட்’ அணுக்களின் வேலை என்ன?
உடலில் காயம் ஏற்பட்டவுடன் ரத்தம் வெளியேறுவதை இயற்கையாகவே தடுக்கும் சக்தி “பிளேட்லட்’ அணுக்களுக்கு உண்டு. ரத்தம் வெளியேறும் இடத்தைச் சுற்றி “கார்க்’ போல் அடைப்பை ஏற்படுத்தி மேலும் ரத்தம் கசிவதை இவை தடுத்துவிடும். டெங்கு, கடும் மலேயா காய்ச்சலால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு இந்த பிளேட்டலட் அணுக்களை உடலில் செலுத்துவார்கள்.
பிளாஸ்மா என்றால் என்ன?
ரத்தத்தில் உள்ள திரவப் பொருள்தான் பிளாஸ்மா. 100 மில்லி லிட்டர் ரத்தத்தில் சுமார் 50 சதவீத அளவுக்கு பிளாஸ்மாவும் 40 சதவீத அளவுக்கு ரத்த சிவப்பு அணுக்களும் இருக்கும். மற்ற அணுக்கள் 10 சதவீதம் இருக்கும். பிளாஸ்மாவில் தண்ணீர், வைட்டமின்கள், தாதுப்பொருள்கள், ரத்தத்தை உறைய வைக்கக்கூடிய காரணிகள் (Factors), புரதப் பொருள்கள் இருக்கும். தீக் காயங்களால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு பிளாஸ்மாவை மட்டும் செலுத்துவார்கள்.
ரத்தத்தில் உள்ள பொருள்கள் யாவை?
ரத்த சிவப்பு அணுக்கள் (Red Blood Cells), ரத்த வெள்ளை அணுக்கள் (White Blood Cells), பிளேட்டலட்டுகள் (Platelets) என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. இவை தவிர திரவ நிலையில் “பிளாஸ்மா’ என்ற பொருளும் உள்ளது.
ரத்த அழுத்தம் (Blood Pressure) என்றால் என்ன?
உடலின் எல்லா உறுப்புகளுக்கும் ரத்தத்தை இதயம் “பம்ப்’ செய்யும்போது ஏற்படும் அழுத்தமே ரத்த அழுத்தம். இதயத்திலிருந்து ஒரு நிமிஷத்துக்கு ஐந்து லிட்டர் ரத்தம் எல்லா உறுப்புகளுக்கும் செல்கிறது. இப் பணியைச் செய்யும் இதயத் தசைகளுக்கு மட்டும் ஒரு நிமிஷத்துக்கு 250 மில்லி லிட்டர் ரத்தம் தேவை.
உடலில் ரத்தம் பயணம் செய்யும் தூரம் எவ்வளவு தெயுமா?
ஒரு சுழற்சியில் (One Cycle) ரத்தம் பயணம் செய்யும் தூரம் ஒரு லட்சத்து 19 ஆயிரம் கிலோமீட்டர்! ரத்தக் குழாய்களுக்குள் செல்லும்போது, அதன் வேகம் மணிக்கு 65 கிலோமீட்டர்! – மோட்டார்சைக்கிளின் சராச வேகத்தைவிட அதிகம்.
மாத்திரை சாப்பிட்டவுடன் தலைவலி அல்லது கால் வலியிலிருந்து நிவாரணம் கிடைப்பது எப்படி?
மாத்திரை சாப்பிட்டவுடன், அதில் உள்ள மருந்துப் பொருள் ரத்தம் மூலம் வலி உள்ள இடத்துக்குப் பயணம் செய்கிறது. வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது.
உடலில் ரத்தம் பயணம் செய்யும்போது எடுத்துச் செல்வது என்ன?
எல்லாத் திசுக்களும் ஆற்றலை எடுத்துச் செல்லும் முக்கியப் பணியை ரத்தம் செய்கிறது. கொழுப்புச் சத்து, மாவுச் சத்து, புரதம், தாதுப் பொருள்கள் வடிவத்தில் ஆற்றலை அது எடுத்துச் செல்கிறது. திசுக்கள் ஜீவிக்க ஆக்சிஜனை எடுத்துச் செல்வதும் ரத்தம் தான்.
ரத்த ஓட்டத்தின் முக்கியப் பணி என்ன?
நுரையீரலில் இருந்து அனைத்துத் திசுக்களுக்கும் ஆக்சிஜனை ரத்தம் எடுத்துச் செல்லும். திரும்புகையில் திசுக்களில் இருந்து கார்பன் – டை ஆக்சைடை நுரையீரலுக்கு எடுத்துவந்து மூக்கு வழியே வெளியேற்றுவதும் ரத்தம்தான்.
google_protectAndRun("render_ads.js::google_render_ad", google_handleError, google_render_ad);

கற்பக மூலிகைகள்


திருமூலரிடம் சீடராகவிருந்த போகர் கற்பக மூலிகைகள் என்ற தலைப்பில் கூறிய பாடலாகும் -
"கேளென்ற 1கருநெல்லி, 2 கருத்த நொச்சி
கெடியான, 3 கருவீழி, 4 கருத்த வாழை
காளென்ற, 5 கரிய கரிசா லையோடு
6 கருப்பான நீலியோடு, 7 கரியவேலி
கோளென்ற 8 கரூமத்தைத் 9 தீபச் சோதி
10 கொடு திரணச் சோதி 11 சாயா விருட்சம்
ஏளென்ற 12 எருமை கனைச்சான் 13 ரோமவிருட்சம்
ஏற்றமாம் 14 சுணங்க விருட்சம் 15 செந்திரா" (1)
"செந்திராய் 16 செங்கள்ளி 17 செம்மல்லி யோடு
18 சிவந்தக றறாழை 19 செஞ்சித்திர மூலம்
நந்திராய்சிவப்பப்பா மார்க்கத்தோடு
நலமான 20 கற்பிரபி 21 கறசேம் பாகும்
பரந்திராய் 22 கல்லுத்தா மரையி னோடு
பாய்ந்த 23 குழல் ஆ தொண்ட 24 மகாபொற்சீந்தல்
25 வெந்திராய் 26 வெண்புரசு 27 வெள்ளைத் துத்தி
மிகு 28 வெள்ளைத் தூதுவளை மிடுக்குமாமே" (2)
"மிடுக்கான குண்டலமாம் 29 பாலை யோடு
30 வெள்ளை நீர்முள்ளி 31 வெண்விண்டுக் காந்தி
கடுக்கான 32 வெண்கண்டங் காரி யோடு
33 கசப்பான பசலையோடு 34 மதுர வேம்பு
கிடுக்கான 35 கிளிமூக்குத் துவரை 36 அமுகண்ணி
கெடியான 37 பொன்மத்தை 38 மதுர கோவை
படுக்கான 39 பொன்வன்னச் சாலியோடு
40 பாங்கான கருந்தும்பை 41 மதனத் தண்டே" (3)
"தண்டொடு 42 மூவிலையாம் குருத்துமாகும்
தணலான 43 சிவத்ததில்லை 44 கருத்த வேம்பு
45 இண்டோடே இவ்வகைகள் நாற்பத் தைந்தும்
ஏற்றமாம் மலைகளிலே மிகுதி உண்டு
பண்டோடு பாடாணம் அறுபத்து நாலும்
பட்டுடனே கட்டுண்டு படுதீப் பற்றும்
துண்டோடு சூதமது கட்டும் ஆகும்
சுயம்பான உபரசங்கள் சத்தும் ஆமே." (4)
"சத்தான மூலிகையில் சுருக்குச் சித்தி
சாப்பிட்டால் மண்டலந்தான் சாவோ இல்லை
மத்தான மன்மதன்போல் தேகமாகும்
மாசற்று நரைதிரைகள் எல்லாம் மாறும்
எத்தான வாசியெல்லாம் இறுகிப் போகும்
ஏறலாம் சுகனத்தில் ஏற்றமாக
அத்தான அடுக்கெல்லாம் சோதித்தேறி
அண்டரண்டபதமெல்லாம் அறிய லாமே." (5)
இப்பாடலின் படி நாற்பத்தைந்து கற்பக மூலிகைகளினைக் கூறியுள்ளார்.மேலும் இம்மூலிகைகளினை முறையாக உட்கொள்ளுபவர்களிற்கு சாவு இல்லை என்றும் மேலும் மன்மதன் போல அழகுடைய மிடுக்கான வாலிபத்தோற்றம் இருக்கும்;முடி நரைக்காது;தோல் சுருங்காது;உடல் மூப்பு அடையாது.மலைகளில் எளிதாக ஏறலாம்.மூச்சு இரைக்காது.விண் வெளியில் உலாவலாம்.வான மண்டலத்தில் உள்ள பல்வேறு நட்சத்திர மண்டல அடுக்குகளைப் பார்க்கலாம்.போன்ற கூற்றுக்களும் மேலும் இம்மூலிகைகளின் சாற்றினால் அறுபத்து நான்கு பாஷாணங்களின் கட்டு உண்டாகும் எனவும் இவற்றின் ரசம் கட்டியாய் மூலிகை மணியாகும் எனவும் கூறுகின்றனர்.ஒவ்வொரு மூலிகைகளின் வேர்,தண்டு,இலை,காய்,பூ,கொட்டைகள் போன்றவற்றின் தனித்தன்மையினை அக்காலத்தில் சித்தர்கள் நன்கு ஆராய்ந்தும் உள்ளனர்.
இம்மூலிகைகளினால் குழந்தைகள் பிறப்பதனையும் நன்கு ஆராய்ந்து அறிந்துள்ளனர் சித்தர்கள்.
கணவனும் மனைவியும் கலவியில் ஈடுபடும் காலத்தில் கணவனின் வலதுநாசித் துவார வழியாக மூச்சு ஓடினால் ஆண் குழந்தை பிறக்கும்.
இட நாசித் துவாரத்தின் வழியாக ஓடினால் பெண் குழந்தை பிறக்கும்.
சுழினை,அஃதாவது நடுவாக ஓடினால் அலி பிறக்கும்.
மூச்சு ஜம்பூதங்களில் தோன்றி முழுமையாக ஓடினால் குழந்தை நூறு வயது இருப்பதோடு,ஆரோக்கியமாக இருக்கும்.
குறைந்து ஓடினால் அதற்கேற்ற மாதிரி அதன் ஆயுள் குறையும்.
ஓடுகின்ற மூச்சு மெல்ல ஓடினால் குழந்தை குட்டையாய்ப் பிறக்கும்.
வளைந்து ஓடினால் முடமாகப் பிறக்கும்.இவைகள் எல்லாம் கலவி செய்கின்ற ஆண்களுக்கு.
பெண்களின் வயிற்றில் மலம் தங்கியிருந்தால் குழந்தை மந்த புத்தியுடன் விளங்கும்.
நீர் தங்கியிருந்தால் ஊமையாகப் பிறக்கும்.
மலம், நீர் ஆகிய இரண்டும் தங்கியிருந்தால் குருடாகப் பிறக்கும்.
இருவருக்கும் ஒரே மாதிரி நல்லமுறையில் சுவாசம் ஓடினால் பிறக்கின்ற குழந்தை அறிவோடும் அழகோடும் விளங்கும்.
சித்தர்கள் எவ்வாறு இதனை அறிந்தவர்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக வியாசருடன் அம்பிகை போகத்தில் ஈடுபட்ட காலத்தில் அம்பிகை கண்ணை மூடிக்கொண்டதால் குருட்டுக்குழந்தை பிறக்கும் என்றும்,அதே வியாசருடன் அம்பாலிகை போகத்தில் ஈடுபட்ட காலத்து அம்பாலிகை வியர்த்து,அருவருத்து இருந்ததால் வெண்மை நிறமுடைய குழந்தை பிறக்கும் என்றும் அதே வியாசருடன் பணிப்பெண் ஒருத்தி போகத்தில் ஈடுபட்ட காலத்தில் அப்பணிப்பெண் மன நிறைவுடன் போகத்தில் ஈடுபட்டதால்,அறிவுடைய குழந்தை பிறக்கும் என்று வியாசர் கூறியதற்கேற்றாற் போலவே,முறையே குருடனாக திருதாட்டிரனும்,வெண்மை நிறமுடைய பாண்டுவும்,அறிவும்,ஆற்றலுமிக்க விதுரரும் பிறந்தனர் என்று மகாபாரதம் கூறுகின்றது.சித்தர்களின் வைத்திய முறைக்கு ஒத்து வரும் இச்சம்பவத்தின்படி வியாசரும் சித்தரென்ற காரணத்தினால் இதனை அறிந்து கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
[தொகு] உசாத்துணை நூல்கள்
துரை இராஜாராம், திருமூலர் வாழ்வும் வாக்கும், நர்மதா பதிப்பகம்
முனைவர் இர.வாசுதேவன் *தமிழில் மருத்துவ இலக்கியங்கள்*, பூங்கொடி பதிப்பகம்

கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

பக்தியைப் போதித்த சித்தர்கள்


சித்தர்கள் என்றாலே உலகவாழ்வைத் துச்சமென மதித்து சிந்தனை அனைத்தையும் சிவனுக்குத் தந்தவர்கள்.சித்தர்கள் ஏராளமானோர் இருந்தாலும் பதினெட்டுச் சித்தர்கள் என்று வரையறுப்பது மர<பு. அவர்கள் பல்வேறு காலகட்டங்களில் வாழ்ந்தவர்கள் . சித்தர்களைப் பதினெட்டு என்ற எண்ணிக்கையில் அடக்கிவிட முடியாது. இன்றும் காடுகளிலும், மலைகளிலும் சித்தர்கள் வாழ்ந்து வருவதாக சொல்கிறார்கள். சித்தர்கள் வெறும் துறவு வாழ்க்கை மட்டும் வாழாது ஆன்மிகத்தில் புதுமை பலவும் புகுத்த அரும்பாடு பட்டுள்ளனர். "நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்'என்று நமக்கு ஞானதீபம் காட்டுகிறார்' சிவவாக்கிய சித்தர். "நாதனாகிய இறைவன் நம் உள்ளத்தில் உறைந்திருக்கிறான். அவனைக் கல்லிலும் செம்பிலும் ஏன் தேடுகிறீர்கள்?' என்று வினாவினைத் தொடுக்கிறார். நடமாடுங் கோயிலாகிய மனிதனுக்கு உதவினாலே மகேசனுக்கு உதவியதாக திருமூலர் திருமந்திரத்தில் குறிப்பிடுகிறார். வெறும் மருந்துகளையும், தகரத்தை தங்கமாக்குவது போன்ற வித்தைகளையும், மட்டும் வலியுறுத்தாது, பக்தியையும், நல்ல பண்பையும், அறநெறிமுறை களையும் போதித்த பெருமை சித்தர் மரபிற்கு உண்டு

108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்

1. திருமூலர் - சிதம்பரம்.

2. போகர் - பழனி என்கிற ஆவினன்குடி.

3. கருவூர்சித்தர் – கருவூர், திருகாளத்தி, ஆணிலையப்பர் கோவில்.

4. புலிப்பாணி - பழனி அருகில் வைகாவூர்.

5. கொங்கணர் - திருப்பதி, திருமலை

6. மச்சமுனி - திருப்பரங்குன்றம், திருவானைக்கால்

7. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர் - மதுரை.

8. சட்டைமுனி சித்தர் – திருவரங்கம்.

9. அகத்தியர் – திருவனந்தபுரம், கும்பகோணத்திலுள்ள கும்பேஸ்வரர் கோவில்.

10. தேரையர் - தோரணமலை (மலையாள நாடு)

11. கோரக்கர் – பேரூர்.

12. பாம்பாட்டி சித்தர் - மருதமலை, துவாரகை, விருத்தாசலம்.

13. சிவவாக்கியர் - கும்பகோணம்.

14. உரோமரிசி - திருக்கயிலை

15. காகபுசுண்டர் - திருச்சி, உறையூர்.

16. இடைக்காட்டுச் சித்தர் - திருவண்ணாமலை

17. குதம்ப்பைச் சித்தர் - மயிலாடுதுறை

18. பதஞ்சலி சித்தர் - சிதம்பரம், அழகர் கோவில், இராமேஸ்வரம்.

19. புலத்தியர் - பாபநாசம், திருஆலவுடையார் கோவில்.

20. திருமூலம் நோக்க சித்தர் - மேலை சிதம்பரம்.

21. அழகண்ண சித்தர் - நாகப்பட்டினம்.

22. நாரதர் - திருவிடைமருதூர், கருவை நல்லூர்.

23. இராமதேவ சித்தர் - அழகர் மலை

24. மார்க்கண்டேயர் - கருவை நல்லூர்.

25. புண்ணாக்கீசர் - நண்ணாசேர்.

26. காசிபர் - ருத்ரகிரி

27. வரதர் - தென்மலை

28. கன்னிச் சித்தர் - பெருங்காவூர்.

29. தன்வந்தரி – வைத்தீஸ்வரன் கோவில்

30. நந்தி சித்தர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி.

31. காடுவெளி சித்தர் - திருக்காஞ்சிபுரம்.

32. விசுவாமித்திரர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி.

33. கௌதமர் - திருவருணை, திருவிடைமருதூர்.

34. கமல முனி - ஆரூர்

35. சந்திரானந்தர் - திருவாஞ்சியம்.

36. சுந்தரர் - வாரிட்சம், திருவாரூர்.

37. காளங்கி நாதர் - திருக்கடவூர், திருப்பணந்தாள்.

38. வான்மீகி - எட்டிக்குடி, திருவையாறு.

39. அகப்பேய் சித்தர் - திருவையாறு, எட்டிக்குடி.

40. பட்டினத்தார் - திருவொற்றியூர்.41. வள்ளலார் - வடலூர்.

42. சென்னிமலை சித்தர் - கேரளத்தில் உள்ள நாங்குனாசேரி.

43. சதாசிவப் பிரம்மேந்திரர் - நெரூர்.

44. ராமகிருஷ்ணர், சாரதாதேவியார் - பேலூர் மடம்

45. ராகவேந்திரர் - மந்திராலயம்.

46. ரமண மகரிஷி - திருவண்ணாமலை, மாத்ருபூதேஸ்வரர் ஆலயம்.

47. குமரகுருபரர் - காசி.

48. நடன கோபால நாயகி சுவாமிகள் - காதக்கிணறு.

49. ஞானானந்த சுவாமிகள் - அனைத்து தபோவனங்கள்.

50. ஷீரடி சாயிபாபா - ஷீரடி.

51. சேக்கிழார் பெருமான் - மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி சன்னதிக்கு பின்புறம்.

52. ராமானுஜர் - ஸ்ரீரங்கம்.

53. பரமஹம்ச யோகானந்தர் - கலிபோர்னியா.

54. யுக்தேஸ்வரர் - பூரி.

55. ஜட்ஜ் சுவாமிகள் - புதுக்கோட்டை

56. ஆதி பராசக்தி திருகோவிலில் 21 சித்தர்களின் ஜீவ சமாதிகள் உள்ளன.

57. கண்ணப்ப நாயனார் - காளஹஸ்தி.

58. சிவப்பிரகாச அடிகள் - திருப்பழையாறை வடதளி.

59. குரு பாபா ராம்தேவ் - போகரனிலிருந்து 13 கி.மி.

60. ராணி சென்னம்மாள் - பிதானூர், கொப்புலிமடம்.

61. பூஜ்ய ஸ்ரீ சித்த நரஹரி குருஜி - மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் சித்தாசிரமம்.

62. குழந்தையானந்த சுவாமிகள் - மதுரை காளவாசல்.

63. முத்து வடுகநாதர் - சிங்கம் புணரி.

64. இராமதேவர் - நாகப்பட்டிணம்.

65. அருணகிரிநாதர் - திருவண்ணாமலை.

66. பாடக்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள் – தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோவில்.

67. மௌன சாமி சித்தர் - தென்காசியிலிருந்து செங்கோட்டை செல்லும் வழியில் உள்ளது.

68. சிறுதொண்டை நாயனார் - திருச்செட்டாங்குடி.

69. ஒடுக்கத்தூர் சுவாமிகள் - பெங்களூரில் அல்சூர் ஏரிக்கரையில் உள்ளது.

70. வல்லநாட்டு மகாசித்தர் - வல்லநாடு.

71. சுப்பிரமணிய சித்தர் - ரெட்டியப்பட்டி.

72. சிவஞான பாலசித்தர் - மயிலாடுதுறை முருகன் சந்நிதி.

73. கம்பர் - நாட்டரசன் கோட்டை.

74. நாகலிங்க சுவாமிகள் - புதுவை அம்பலத்தாடையார் மடம்.

75. அழகர் சுவாமிகள் - தென்னம்பாக்கம்.

76. சிவஞான பாலைய சுவாமிகள் - புதுவைக்கு வடக்கே 6 மைல் தொலைவில் உள்ளது.

77. சித்தானந்த சுவாமிகள் - புதுவைக்கு அருகிலுள்ள கருவடிக்குப்பம்.

78. சக்திவேல் பரமானந்த குரு - புதுவையிலுள்ள முதலியார் பேட்டை.

79. ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள் - வில்லியனூர் செல்லும் பாதையில் வலப்புறம் அமைந்து உள்ளது.

80. அக்கா சுவாமிகள் - புதுவையில் உள்ள குதிரைக்களம் அருகே.

81. மகான் படே சுவாமிகள் - சின்னபாபு சமுத்திரம்.

82. கம்பளி ஞானதேசிக சுவாமிகள் - புதுவை அருகில் ருத்திர பூமிக்கு சமீபமாக அமைந்துள்ளது.

83. பகவந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.

84. கதிர்வேல் சுவாமிகள் – ஸ்ரீலங்கா, புதுவை அருகில் சித்தன் குடியிலும் சமாதி உண்டு.

85. சாந்த நந்த சுவாமிகள் - ஸ்ரீ சாரதா சிவகங்கை பீடத்திற்கு அருகில் உள்ளது.

86. தயானந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.

87. தஷிணாமூர்த்தி சுவாமிகள் - பாண்டிசேரியடுத்த பள்ளித் தென்னல்.

88. ஞானகுரு குள்ளச்சாமிகள் - புதுவை.

89. வேதாந்த சுவாமிகள் - புதுவை, திருமுத்துகுமார் சுவாமிகள் தோட்டத்தில் உள்ளது.

90. லஷ்மண சுவாமிகள் - புதுவையிலுள்ள புதுப்பட்டி.

91. மண்ணுருட்டி சுவாமிகள் - புதுவையிலுள்ள சுதேசி காட்டன் மில் எதிரில்.

92. சுப்பிரமணிய அபிநய சச்சிதானந்த பாரதி சுவாமிகள் - பாண்டிசேரியிலுள்ள எல்லப் பிள்ளை.

93. யோகி ராம் சுரத்குமார் (விசிறி சுவாமிகள்) - திருவண்ணாமலை.

94. கோட்டூர் சுவாமிகள் - சாத்தூர் அருகிலுள்ள கோட்டூர்.

95. தகப்பன் மகன் சமாதி - கிரிவலம் வந்த நல்லூர் அருகே பனையூர்.

96. நாராயண சாமி அய்யா சமாதி - நாகர்கோவில்.

97. போதேந்திர சுவாமிகள் - தஞ்சை மாவட்டத்திலுள்ள மருதநல்லூர்.

98. அவதூர ரோக நிவர்தீஸ்வரர் சுவாமிகள் - சென்னை பூந்தமல்லி.

99. வன்மீக நாதர் - எட்டிக்குடி.

100. தம்பிக்கலையான் சித்தர் - சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவிலில் உள்ள 108 சிவலிங்கங்களில் இரண்டாவதாக உள்ள லிங்கத்தில் ஐக்கியம் ஆகியுள்ளார்.

101. மெய்வரத் தம்பிரான் சுவாமிகள் - திருச்சி, ஜெயங்கொண்ட சோழபுரத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது.

102. குகை நாச்சியார் மகான் - திருவண்ணாமலை.

103. வாலைகுருசாமி - சிதம்பரத்திலுள்ள கொம்மடிக் கோட்டை.

104. பாம்பன் சுவாமிகள் - திருவான்மியூர்.

105. குமாரசாமி சித்தர் சுவாமிகள் - கோயமுத்தூரிலுள்ள பூராண்டான் பாளையம்.

106. பெரியாழ்வார் சுவாமிகள் - அழகர் கோவில் (மதுரை)

107. மாயம்மா ஜீவசமாதி - கன்னியாகுமரி.

108. பரமாச்சாரியார் ஜீவசமாதி - காஞ்சிபுரம்.


பதினெண் சித்தர்களும் சமாதியான ஸ்தலங்களைப் பற்றி குறிப்பிடும் பழைய ஓலைச்சுவடி :


ஆதி காலத்திலே தில்லை திருமூலர்அழகுமலை இராமதேவர்அனந்த சயன கும்பழனி திருப்பதி கொங்கணவர்கமலமுனி ஆரூர்சோதி அரங்க சட்டமுனி கருவை கருவூரார்சுந்தரானந்தர் கூடல்சொல்லும் எட்டிக்குடியில் வான்மீகரோடு நற்றாள் காசி நந்திதேவர்ப்லாதி அரிச்சங்கரன் கோவில் பாம்பாட்டிபழனி மலை போகநாதர்திருப்பரங்குன்றமதில் மச்சமுனிபதஞ்சலி இராமேசுவரம்சோதி வைத்தீஸ்வரம் கோவில் தன்சந்திரி பேரையூர்கோரக்கர் மாயூரங்குதம்பர்திருவருணையோர் இடைக்காட சமாதியிற்சேர்ந்தனர் எமைக் காக்கவே.


இது நெற்கட்டும் செவல் மன்னர் பூலித்தேவர் காலத்தில் உள்ள ஓலைச்சுவடியின் சான்று.


மதுரை அழகர் கோவிலின் முன்பாக 18-ம் படி கருப்பண்ணசாமியாக உள்ள 18 படிகளும், 18 சித்தர்கள் ஆவார்கள். ஆடி 18 அன்று சிறப்பு பூசை நடைபெறுகிறது.


கரூர் அருகில் உள்ள அய்யர் மலையில் உள்ள சுனையில் பஞ்சமாசித்தர்களான


பஞ்சமுக சுரேஸ்வர சித்தர்,
சதுர்முக சுரேஸ்வர சித்தர்,
திரிபலாதர சுரேஸ்வர சித்தர்,
ஸ்கந்த பதுமபலாதி சித்தர்,
திரி மதுர நீற்று முனீஸ்வர சித்தர் வசிக்கிறார்கள்.

கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

சிவன்
சதுரகிரி யாத்திரை மின் புத்தகம்
என் கண்னில் பட்டது சக்தி விகடனில் ஒவ்வொரு இதழிலும் வெளிவந்த சதுரகிரி யாத்திரையின் கடைசி தொடர்தான். படித்தேன் பிரம்மித்தேன். அனைத்து தொடரையும் எடுத்தேன். இதோ இந்த பதிவில் உங்களுக்காக அந்த சதுரகிரி யாத்திரை தொடர் முழுவதையும் உங்களுக்காக கொடுத்துள்ளேன். சுந்தர மாகாலிங்கத்தின் அருள் பெற உங்களுடன் சேர்ந்து பிரார்த்திக்கிறேன்.


ஸ்ரீ சுந்தர மகாலிங்கத்துக்கு அரோஹரா!

ஸ்ரீ சந்தன மகாலிங்கத்துக்கு அரோஹரா!


சதுரகிரி யாத்திரை மின் புத்தகத்தை பதிவிறக்க

கிளிக்குங்கள்
http://www.megaupload.com/?d=QAVMN6JE

கிளிக்குங்கள்

Wednesday, December 30, 2009

காசி மாநகரம் என்பது இரண்டு பகுதிகளானது. ஒன்று நகர வாழ்க்கை கொண்ட பகுதி. மற்றொன்று கங்கை நதியின் கரையோரம் அனைவராலும் வணங்கப்படும் ஆன்மீக நகரம்.


நாம் பயணம் செய்யப்போவது இரண்டாம் நகரமான ஆன்மீக நகரம். கங்கை நதியின் பயணத்திற்கு ஏற்ப கரையில் படித்துறைகள் கட்டப்பட்டுள்ளன. சுமார் 350க்கும் மேற்பட்ட படித்துறைகள் இருக்கின்றன. இவற்றை காஹட் (Ghat) என அழைக்கிறார்கள். ஒவ்வொரு காஹட்க்கும் ஒரு பின்புலமும் காரணமும் இருக்கிறது. படித்துறைகளை மூன்று வகையாக பிரித்திவிடலாம். அரசர்கள் கட்டிய படித்துறை, ஆன்மீக மடங்கள் கட்டிய படித்துறை மற்றும் பொதுமக்களுக்கான படித்துறை என வகைப்படுத்தலாம். இதில் ஆன்மீக மடங்களின் படித்துறை பொதுமக்களின் படித்துறையாகவே பயன்படுத்தபடுகிறது.

விஷேஷ காலத்தில் மட்டும் ஆன்மீக மடாதிபதிகள் அவற்றை பயன்படுத்துகிறார்கள். ஆனால் அரசர்களின் படித்துறை என்பது அரசர் மட்டுமே பயன்படுத்தும் அமைப்பாக இருந்துவந்தது. தற்காலத்தில் அரசர்கள் மற்றும் முடியாட்சி இல்லாத காரணமாக இவை பயன்படுத்தப்படாமல் இருக்கிறது.

காசியில் அதிகாலை தியானம் முடிந்ததும் நான் கண்ட காட்சி.


குடும்பமோ வேறு நபர்களோ அதிகமாக படித்துறையை யாரும் பயன்படுத்துவதில்லை. அரசர்களின் படித்துறை என்றவுடன் ஒன்று தான் என நினைத்துவிடக்கூடாது. பாரத தேசத்தின் பல அரசர்கள் இங்கே தங்களுக்கு என பிரத்யோகமான படித்துறையை கலைநயத்துடன் கட்டியிருக்கிறார்கள். அதில் அவர்கள் மட்டும் ஏகாந்தமாக கங்கையை ரசிக்கவும், ஆராதிக்கவும் ஏகப்பட்ட விஷயங்களை வடிவமைத்து இருக்கிறார்கள்.

பல அரசர்களுக்கு படித்துறை கட்டும் அளவுக்கு காசி நகரம் பொதுவான ஊராக இருந்தது. இவற்றை புரிந்துகொள்ள வரலாற்று பாடத்தின் சில பக்கங்களை நாம் புரட்ட வேண்டும். காசி என்பது நகரம் என்பதை காட்டிலும் அது ஒரு நாடு என கூறலாம். பாரத தேசம் பல சிற்றரசர்களால் சிதறுண்டு ஆளும் காலத்தில் காசி நகரம் ஒரு அரசின் கீழ் இருந்தது.

காசி மற்றும் அதன் சுற்றுபுற நகரங்கள் இணைந்து காசி சமஸ்தானமாக இருந்தது. காசி சமாஸ்தானம் பிற அரசுகளை விட ஒரு தனித்துவமாக இருந்தது. காசி சமஸ்தானத்தில் ராணுவம் மற்றும் போர்படை என்பது இல்லை. காசி ராஜா காசியை நிர்வாகிக்கும் தன்மையை மட்டுமே கொண்டவராக இருந்தார். காசி மேல் யாரும் போர் தொடுக்கவோ, காசி அரசர் பிறர் மேல் போர் தொடுக்கவோ மாட்டார். தற்காலத்தில் கூட உலகில் ஒரு நாடு அப்படி இருக்கிறது. அது உங்களுக்கு ஞாபகம் வருகிறதா?

காசியில் பல கல்விச்சாலைகள் இருந்ததால் பாரத தேசத்தில் பல நாட்டு அரசர்களும், அறிஞர்களும் அங்கே வந்து பாடம் பயின்றனர். அதனால் காசி மாநகரம் கல்விக்கு பிரதானமான விஷயமாக இருந்தது. ஐநூறு வருடத்திற்கு முன் தமிழகத்தில் ஒருவர் காசி சென்று படித்தவன் என கூறினால் அவருக்கு கிடைக்கும் மதிப்பு அளவிட முடியாதது. காசி ராஜா அங்கே இருக்கும் பல்கலைகழகத்தின் சிறந்த கல்வியாளராக தேர்ச்சி பெற்று சமஸ்தானத்தில் அறிஞர்களுடன் அலங்கரிப்பவராக இருப்பார்.

பாரத தேசத்தில் உள்ள அறிஞர்கள் தங்களின் ஆறிவை நிரூபணம் செய்யவும், ஆராய்ச்சிகளை வெளியிடுவதற்கும் காசிக்கு செல்லுவார்கள். அங்கே அறிஞர்கள் குழு ஒன்று (Senate members) ஆய்வு செய்து சான்றிதழ் கொடுக்கும். சான்றிதழ்கள் செப்பு தகட்டில் அமைந்திருக்கும். சில அறிஞர்கள் தனது செப்பு பட்டையத்தை சுமந்து வர பல அடிமைகளையும், குதிரைகளையும் வைத்திருந்ததாக வரலாற்று தகவல்கள் கூறுகிறது.

காசி ராஜாவின் அரண்மனை பிரம்மாண்டமானது. காசி அரசர்களுக்கு பல கலைகள் தெரியும் என்றும் அதில் பல அறிவிப்பூர்வமான காரியங்கள் செய்தார்கள் என நாடோடிக்கதைகள் உண்டு.

காசியில் உள்ள படித்துறைகளில் பல நாட்டு ராஜக்களுக்கு சிறிய அரண்மணைகளை கட்டுவதற்கு அனுமதித்து, இரு விரோத நாட்டு ராஜாக்கள் ஒரே நேரத்தில் வந்தாலும் சச்சரவு இல்லாமல் அமைதியை நிலைநாட்டுவது காசி ராஜாவின் முக்கிய பணியாக இருந்தது.

படித்துறையில் ராஜாக்களுக்கு கட்டப்பட்ட கட்டிடங்கள் சாதாரணமானது அல்ல. ஒவ்வொன்றும் குட்டி அரண்மனை. சில அரண்மனைகளில் இருந்து பார்த்தால் கங்கை நதியும் அதன் கரையில் உள்ள மனிதர்களுக் தெரிவார்கள். ஆனால் கரையில் இருந்து பார்த்தால் அரண்மனையில் இருப்பவர்களை பார்க்க முடியாது. இது போன்ற கலை நயம் பல அதில் உள்ளன. ராஜாஸ்தான் அரசர் ராஜா ரஞ்சித் சிங் , தனது நாட்டிலிருந்து ஊதா நிற சலவைக் கற்களை கொண்டு வந்து இங்கே அரண்மனை கட்டி இருக்கிறார். சத்ரபதி சிவாஜி இங்கே ஒரு அரண்மனை படித்துறை அமைத்திருக்கிறார். நேப்பாள் மஹாராஜாவும், சோழ அரசர்களும் இங்கே தங்கள் சந்ததியினர் வந்தால் தங்குவதற்கு அரண்மனை கட்டியிருக்கிறார்கள்.

காசி நகரம் இவ்வளவு தொன்மையான ஊராகவும், பல நாட்டு அரசர்கள் விரும்பும் ஊராகவும் இருந்தது.

நிற்க... எதற்கு இந்த விக்கிப்பிடியா விளக்கம் என்கிறீர்களா?


பாரத தேசத்தில் இருக்கும் அரசர்கள் மக்கள் விரும்பும் படி காசியில் என்ன இருக்கிருக்கிறது ? அங்கே ஐந்து அதிசயங்கள் நடக்கிறது. அது ஒரு காரணமாக இருக்கலாம். அவற்றை பட்டியலிடுகிறேன்

1) பல்லி சப்தம் எழுப்பாது. : - காசியில் பல்லிகள் உண்டு. ஆனால் அவை சப்தம் எழுப்புவதில்லை. நம் மக்கள் பல்லியின் சப்தத்தை சகுனமாக எடுப்பவர்கள். காசியில் அதற்கு இடமில்லை.

2) பிணம் நாற்றம் எடுக்காது : பிணம் எரியும் பொழுது பக்கத்தில் நின்று இருக்கிறீர்களா? பிணத்தின் கேசமும், இரத்தம், சதை மற்றும் தோல் எரியும் பொழுது அதிலிருந்து வரும் வாடை வார்த்தையால் விளக்க முடியாது. இதைத்தான் பிண வாடை என சொல்வழக்கில் கூறுவார்கள். ஆனால் இங்கே பிணம் எரியும் பொழுது அருகில் நின்றால் எந்த விதமான நாற்றமும் இருக்காது.

3) கருடன் வட்டமிடாது - காசியில் கங்கை கரையில் பிணங்கள் எரிக்கபட்டாலும், உணவுகள் சிதறிகிடந்தாலும் இறைக்காக கருடன் வட்டமிடுவதில்லை. கருடன் அங்கே பறந்து செல்லும் ஆனால் வட்டமிடாது.

4) பூ மணக்காது : இது உங்களுக்கு கொஞ்சம் மிகுதியாகத்தான் தெரியும். :) என்ன செய்ய காசியில் அப்படித்தான் இருக்கிறது. தென்நாட்டில் கிடைக்கும் பூக்கள் வடநாட்டில் கிடைக்காது, முக்கியமாக மல்லி முல்லை இவைகள் கிடைக்காது. ஆனால் சாமந்தி பூ அதிகமாக கிடைக்கும். தென்நாட்டில் சாமந்திபூவை மலர்வளையத்தில் மட்டுமே வைப்பார்கள். சாமந்திப்பூவில் ஒருவிதமான நெடி இருக்கும்.

பலருக்கு இந்த பூவின் வாசம் பிடிக்காது எனலாம். அதனாலேயே நம் ஊரில் பூஜைக்கு பயன்படுத்தமாட்டார்கள். ஆனால் காசியில் இந்த பூக்கள் அதிகம் கிடைக்கிறது. ஆனாலும் அவை வாசங்கள் இல்லாமல் காகிதப்பூ போல இருக்கிறது. வெளியூரில் விளையும் பூக்களை கொண்டு சென்றால் காசியில் மணக்கும். ஆனால் காசி பூக்கள் மணப்பதில்லை.

5) பால் வற்றாது : இங்கே பசுக்கள் இறைவனைவிட அதிகமாக மதிக்கப்படுகிறது. பசுக்கள் கட்டப்படுவதில்லை. பசுவிடம் தேவையான பால் கிடைத்தவுடன் அவற்றை விட்டுவிடுகிறார்கள். பசுக்கள் யாரையும் முட்டுவதோ உதைப்பதோ இல்லை. மனிதனை கண்டு மிரளுவதில்லை. சில கடைகளுக்கு சென்று அங்கே இருக்கும் உணவை தின்று கடை முதலாளியை கதற செய்யும். இங்கே யாரும் பசுவை துன்புறுத்துவதில்லை. பசுக்கள் கங்கையின் உருவில் உலாவருவதாக மக்கள் கருதுகிறார்கள். அதனால் பசுக்களுக்கு அவ்வளவு மதிப்பு. கங்கை இந்த நகரத்தில் என்றும் __________________ அதனால் பசுக்களின் பாலும் வற்றாது என்கிறார்கள்.

அது என்ன வாக்கியம் விடுபட்ட இருக்கிறது என்கிறீர்களா? கங்கை ________ என கூறினால் பல கோடிவருடம் தினமும் ஆயிரம் பசுக்களை கொன்ற பாவம் கிடைக்குமாம். நான் என்றைக்காவது கங்கை ________ உண்டா என கேட்க தனது துடுப்பை எடுத்து என்னை தாக்க வந்தான் ஒரு படகு ஓட்டி. எனக்கு ஏற்கனவே பாவம் கிடைத்தது. அதை கங்கையில் குளித்து சரி செய்துவிட்டேன் :).

படகோட்டி கூறிய அதிசங்களைதான் நான் இங்கே கூறி இருக்கிறேன். இதில் ஐந்தையும் ஆராய்ந்து உண்மை என உணர்ந்து இங்கே பட்டியலிடுகிறேன். பலவருடங்கலாக இன்றும் இயற்கையாகவே ஐந்து விஷயங்கள் நடக்கிறது. காசியில் மட்டும் என்ன இப்படி நடக்கிறது என உங்களால் காரணத்தை யூகிக்க முடியுமா? கொஞ்சம் யோசியுங்கள். அதற்குள் நான் கங்கை கரையின் படித்துறையில் உலா சென்று வருகிறேன்.தொகுப்பு ஸ்வாமி ஓம்கார்

காசியின் பெருமைகள்


மேற்கண்ட பழம்பெருமை வாய்ந்த புராண மற்றும் வரலாற்றுச் சிறப்புகள் மட்டுமல்லாமல், மேலும் பல வரலாற்றுச் சிறப்பு மிக்க பெருமைகளும் இடங்களும் காசி நகரத்திற்கு உண்டு. காசி விஸ்வநாதர் கோவில், கால பைரவர் கோவில், அன்னபூர்ணேஸ்வரி கோவில், விசாலாக்‌ஷி கோவில், துர்கை கோவில், சங்கட் மோட்சன் ஹனுமான் கோவில், துளசிமனாஸ் மந்திர், பாரத மாதா கோவில், கிரி ஸ்வாமி பாஸ்கரானந்த் சமாதி, என்று பல ஆலயங்கள் உள்ளன. மேலும் புண்ணிய நதியாம் கங்கையும் அதன் கரையில் உள்ள ஹரிசந்திர கட்டம், சிந்தா கட்டம், தசாஸ்வமேத கட்டம், மணிகர்ணிகா கட்டம், பஞ்சகங்கா கட்டம், ஆகிய கட்டங்களும், கங்கை நதியைப் பூஜை செய்து வழிபடும் அற்புதமான ‘ஆரத்தி’ வழிபாடும் மிக முக்கியமானவை.

திருத்தசாங்கம் என்று ஒரு சிற்றிலக்கிய பிரபந்த வகை உண்டு.. ஒரு தலத்தின் இறைவனை (அல்லது ஒரு நாட்டின் மன்னனை/அரசியை) முன்வைத்து அவனது நாமம், நாடு, நகர், கொடி, மலை, ஆறு என்று பத்து அம்சங்களைச் சிறப்பித்து வெண்பாக்களாகப் பாடும் பாடல் வகை. இந்தப் பாடல் வகையில் பாரதமாதாவை முன்வைத்து மகாகவி பாரதி “பாரத தேவியின் திருத்தசாங்கம்” என்று பாடியிருக்கிறார். அதில், பாரத தேவியின் நகராகவும், ஆறாகவும் எவற்றைக் கூறுகிறார் தெரியுமா?

இன்மழலைப் பைங்கிளியே! எங்கள் உயிரானாள்
நன்மையுற வாழும் நகரெதுகொல்? - சின்மயமே
நானென் றறிந்த நனிபெரியோர்க் கின்னமுது
தானென்ற காசித் தலம்.

வண்ணக் கிளி! வந்தே மாதரமென் றோதுவரை
இன்னலறக் காப்பா ளியாறுரையாய்! - நன்னர்செயத்
தான்போம் வழியெலாம் தன்மமொடு பொன்விளைக்கும்
வான்போந்த கங்கையென வாழ்த்து.

மேலும், காசி மன்னரின் அரண்மனை, ஸம்ஸ்க்ருத பல்கலைக் கழகம், பனாரஸ் ஹிந்து பலகலைக் கழகம், பனாரஸ் பல்கலையில் உள்ள கோவில், சாரநாத் நகரம், சாரநாத் புத்தர் கோவில், தாமெக் ஸ்தூபி, அருங்காட்சியகம், இலங்கை ஆளுனர் ஜப்பானிய முறைப்படி கட்டிய முல்காஞ் குடி விஹார், அதனருகில் அசோகச் சக்ரவர்த்தி புத்த கயாவிலிருந்து அனுப்பிய போதி மரம், 23-வது தீர்த்தங்கரரான பர்ஸ்வனாத் பிறந்த இடத்தில் உள்ள ஜெயின் கோவில், சீனர் கோவில் மற்றும் சாரநாத் மஹாதேவர் கோவில் ஆகியவையும் இருக்கின்றன.

காசி மஹாத்மியம்


வடக்கே இமயம், தெற்கே ராமேஸ்வரம், கிழக்கே புரி, மேற்கே துவாரகை என்று நம் பாரத தேசமே ஒரு புண்ணிய பூமியாக இருக்கிறது. இந்தப் புண்ணிய பூமியின் நடுவே இருக்கிறது புண்ணிய நதியாம் கங்கை பிரவாஹமாக ஒட்டிக்கொண்டிருக்கும் காசி மாநகரம்.

“ஸாதாரணமாக எந்த க்ஷேத்ரத்தின் ஸ்தல புராணத்தைப் பார்த்தாலும் ‘இது காசிக்குச் சமமானது; அல்லது காசியை விட உசந்தது’ என்றே இருக்கும். இப்படி ஒரு க்ஷேத்ரத்தை மற்ற எந்த க்ஷேத்ரத்தோடும் ‘கம்பேர்’ பண்ணாமல் காசியோடேயே எல்லா க்ஷேத்ரங்களையும் ஒப்பிட்டிருப்பதாலேயே காசி தான் க்ஷேத்ர ராஜா என்று தெரிகிறது. இப்படியே மற்ற புண்ய தீர்த்தங்களைப் பற்றிய புராணங்களிலும் அவற்றை ஒன்றோடொன்று ஒப்பிட்டு உசத்தி சொல்லாமால், அந்தந்த நதியைப் பற்றி ‘இது கங்கா துல்யமானது’ அல்லது ‘கங்கையை விட விசேஷமானது’ என்று தான் சொல்லியிருக்கும். இதனாலேயே கங்கை தான் தீர்த்தங்களில் தலைசிறந்தது என்று ‘ப்ரூவ்’ ஆகிறது”. (காஞ்சி மஹாஸ்வாமிகள்- தெய்வத்தின் குரல் – ஏழாம் பகுதி – பக்கம் 832)

வடமாநிலங்களில் உள்ளவர்கள் தென் பகுதிகளுக்கும், தென்மாநிலங்களில் உள்ளவர்கள் வடப் பகுதிகளுக்கும் க்ஷேத்ராடனம் போவது நம் தேசத்தில் தொன்று தொட்டு வரும் ஆன்மீகக் மரபு. இந்த கலாசாரமே பல மொழிகள் பேசும், பல பழக்க வழக்கங்கள் கடைபிடிக்கும் நம் தேச மக்களின் ஒருமைப்பாட்டிற்கு இலக்கணமாக விளங்குகிறது. உதாரணமாக ராமேஸ்வரத்தின் அக்னி தீர்த்த (கடல்)மண்ணை எடுத்துச் சென்று பிரயாகையில் (அலகாபாத்) கங்கை, யமுனை, சரஸ்வதி சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் கரைத்து, பின்னர் அங்கிருந்து கங்கை நீரை எடுத்து வந்து ராமேஸ்வரத்தில் இறைவனுக்கு அபிஷேகம் செய்து, காசி ராமேஸ்வரம் ஆகிய இரண்டு தலங்களிலும் பித்ருக்களுக்கு சிராத்தம், தர்ப்பணம் ஆகியவை செய்து முடித்த பின்னரே காசி-ராமேஸ்வர க்ஷேத்ராடனம் பூர்த்தியடைகிறது. இவ்வாறு ஆன்மீகத்திலும் கலாசாரத்திலும் பின்னிப்பிணைந்து மக்களை ஒற்றுமையாக வைத்திருப்பதே இந்து மதம் என்கிற சனாதன தர்மம்.

பாவலரும் நாவலரும் பண் மலரக் கண்மலரும்
காவலரும் ஏடவிழ்க்கும் காசியே - தீ வளரும்
கஞ்சக் கரத்தான் கலைமறைக்கு நாயகமாம்
அஞ்சக் கரத்தான் அகம்

- குமரகுருபரர் (காசிக் கலம்பகம்)

முதல் இரண்டு அடிகளில், ஏடவிழ்க்கும் (இதழ் விரிக்கும்) அலர்களையும் (பூக்களையும்), தங்கள் ஏடவிழ்க்கும் (சுவடிகளைத் திறக்கும்) நாவலர்களையும் குறிக்குமாறு இரு பொருள்பட அமைந்த அழகிய பாடல் இது. தென் தமிழ் நாட்டில் பிறந்த குமரகுருபரர் காசி சென்று சைவ மடம் அமைத்தார்.

காசித் தலத்தின் பெருமைகளைக் கூறும் காசிக் கலம்பகம் என்ற அழகிய நூலையும் எழுதினார்.

காசி க்ஷேத்திரத்தின் பெருமைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். காசி நகரத்தின் வடக்கு திசையிலிருந்து வரும் “வருணா” நதியும், தெற்கு திசையிலிருந்து வரும் “அசி” நதியும் கங்கை நதியில் கலக்கின்றதால் “வாரணாசி” என்றும் அழைக்கபடுகிறது. பகவான் மஹாதேவர் தன்னுடைய திரிசூலத்தின் மேல் கால்களை வைத்து நின்று இந்தக் காசி நகரத்தைப் படைத்தார் என்று நம்பப் படுகிறது. ஆகையால் எந்த ஜந்துவும் தன்னுடைய சரீரத்தை இங்கு தியாகம் செய்தால் மோட்சம் அடைந்து சிவலோகம் செல்வதாக ஐதீகம்.

மேலும் பகவான் ஆதி சங்கரர் தன் அத்வைத ஸ்தாபனத்தை இங்கிருந்தே ஆரம்பிக்கிறார் என்று சொல்லலாம். அன்றைய சமூக அடுக்கில் தாழ்ந்திருந்த சண்டாளனிலும் பிரம்மத்தைக் காண வேண்டும் என்ற நடைமுறை அத்வைதம் சங்கரரின் மெய்யுணர்வில் உருவானது இந்தத் தலத்தில் தான்! அந்த உபதேசத்தைத் தனக்கு நல்கிய சண்டாளனையே குருவாகப் போற்றி அவர் “மனிஷா பஞ்சகம்” என்ற துதியை அருளியதும் காசியில் தான்!

பார்க்க: மனிஷா பஞ்சகத்தின் தமிழ் வடிவம் : சாதி வெறியருக்கு சங்கரர் எழுதியது

ஆன்மீகத்தின் மூலமாகவும், கலாசாரத்தின் மூலமாகவும் நம் தேசத்தின் ஒருமைப்பாடு காக்கப் படுவதற்கு காசி-காஞ்சி நகரங்களின் தொடர்பும், கங்கை-காவிரி நதிகளின் தொடர்பும் சிறந்த ஆதாரங்களாக இருக்கின்றன.

“காசிக்கும் காஞ்சிக்கும் நடுவே ஆயிரம் மைலுக்கு மேல் இருக்கிறது. காசியில் அன்னபூரணி விசேஷம். காஞ்சீபுரத்திலும் ஜகன்மாதா 32 தர்மங்களைப் பண்ணும் போது அன்னதானம் பண்ணியிருக்கிறாள். காமாக்‌ஷி ஆலயத்தில் கர்ப்ப கிருஹத்தின் நுழைவாசலுக்கு நேரே அன்னபூர்ணேச்வரிக்கு ஸந்நிதி இருக்கிறது. அதன் விமானத்தில் தக்ஷிண தேசத்தில் வேறே எங்கேயும் இல்லாத விதத்தில் ஆறு சிகரங்கள் இருக்கின்றன. ஏன் இப்படி இருக்கிறது என்பதற்குப் பதில் காசியில் கிடைக்கிறது! காசியில் அன்னபூரணி விமானத்தில் இதே மாதிரி ஆறு சிகரங்கள் இருக்கின்றன. அதன் அச்சாகத்தான் இங்கே ஆயிரம் மைல் தாண்டிக் காஞ்சியிலும் இப்படி இருக்கிறது! சின்ன விஷயங்களில் கூட இவ்விதம் தேசத்தின் வெவ்வேறு கோடிகளில் உள்ள ஸ்தலங்களில் ஒற்றுமையிருப்பதால் க்ஷேத்ர ஐதிஹ்யங்களை லேசாகத் தள்ளி விடுவதற்கில்லை என்று தெரிகிறதல்லவா?” - (காஞ்சி மஹாஸ்வாமிகள்- தெய்வத்தின் குரல் – இரண்டாம் பகுதி – பக்கம் 745-746)

Google Forms


பொதுவாக வாடிக்கையாளர்களின் கருத்தைப் பெறுவதற்கு அவர்களிடத்தே ஒரு விண்ணப்பம் கொடுக்கப்பட்டு பூர்த்தி செய்து கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படும். மேலும், அவர்களின் விமர்சனத்தை பதிவு செய்வதற்கும் அல்லது பரிந்துரைகளை பதிவு செய்வதற்கும் மேற்கூறிய அதே வழியினையே பயன்படுத்திக் கொள்ளப்படும். இவ்வாறு திரட்டப்படும் தகவல்களின் அடிப்படையில் நிறுவனங்கள் தங்களது அடுத்தக்கட்ட நடவடிக்கையினை, செயல்பாட்டினை மேற்கொள்ளுகின்றன. இதற்கு அதிக மனித உழைப்பு தேவைப்படுகிறது. குறிப்பாக, திரட்டப்பட்ட / சேகரிக்கப்பட்ட தகவல்களை ஒருங்கமைக்கும் பணி தான் மிகக்கடினமான பணியாகும். அதாவது, தனித்தனியாக இருக்கும் விண்ணப்பங்களிலிருந்து தகவல்களை ஒரு பொது இடத்தில் பதிவுசெய்ய வேண்டும். இவ்வாறு, அனைத்து விண்ணப்பங்களின் தகவல்களும் ஒருங்கே ஒரு இடத்தில் பதிவு செய்த பிறகுதான், நிறுவனங்கள், அத்தகைய தகவல்களை உரிய வழியில் / முறையில் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதற்கு மிகச்சிறந்த உதாரணம், நம்முடைய ஓட்டு முறை. அதிலும் குறிப்பாக முந்தைய தாள் ஓட்டு முறை (Paper Voting). பல ஊர்களிலிருந்து சேகரிக்கப்பட்ட வாக்குச்சீட்டுகள் ஒரு பொது இடத்தில் கொட்டி அந்தந்த வட்ட, மாவட்ட தலைமையங்களில் கொட்டி ஒவ்வொன்றாக கணக்கிடப்படும். இந்த கணக்கீடுகள் அந்த தொகுதிக்குட்பட்ட அனைத்து தேர்தல் தலைமையகங்களிலும் நடைபெறும். இறுதியில் அனைத்து தேர்தல் தலைமையங்களிலும் ஓட்டுக்களின் எண்ணிக்கை வரைவுபடுத்தப்பட்டு அதிக ஓட்டுக்களைப் பெற்றவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவர். இதில், மிகக் கடினமானது, தனித்தனியான ஓட்டுக்களை கணக்கிலெடுத்து அந்தந்த வேட்பாளர் பெற்ற மொத்த எண்ணிக்கையை அறிவதுதான். இதனை மிக எளிதாக எதிர் எதிர்கொள்வதற்கு ஏதேனும் மார்க்கமிருக்கறதா?
சுற்றுலா செல்ல வசதியேற்படுத்திக் கொடுக்கும் நிறுவனமொன்று, தங்களுடைய வாடிக்கையாளர்களின் தகவல்களை திரட்டி, அதற்கேற்றாற் போல், பயண வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும். உதாரணத்திற்கு, கீழ்க்கண்ட தகவல்கள் பொதுவாக திரட்டப்படும்.1. பெயர்2. பெரியவர் எண்ணிக்கை3. சிறியவர் எண்ணிக்கை4. உணவு (சைவம் / அரைவம்)5. விருப்ப உணவு (ஞாயிறு சிற்றுண்டி)6. சிறப்புத் தேவை7. தொலைபேசி எண்.இவை ஒருங்கமைக்கப்பட்டு பின் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், இத்தகைய ஒருங்கமைத்தலுக்கு அதிக மனித உழைப்பும், நேரமும் தவிர்க்க முடியாததாக இருக்கிறது. இதனை எளிதாக எதிர்கொள்ள ஏதேனும் வழி இருக்கிறதா?ஏராளமான பயனீட்டாளர் வசதிகளை அள்ளி வழங்கும் GOOGLE-தற்போது GOOGLE DOCS - பகுதியில் ஒரு புதிய வசதியினை அறிமுகப்படுத்தியுள்ளது.அது தான், FORMS - பகுதியாகும். கேள்வி - பதில் வடிவிலாக அமைக்கப்படும் இத்தகைய விண்ணப்பங்களை வாடிக்கையாளர்கள் தங்களுடைய வீட்டிலிருந்தபடியே பூர்த்தி செய்து விடலாம். நிறுவனங்களுக்கு நேரடியாகவோ (அ) தொலைபேசியிலோ தெரிவிக்க வேண்டிது அவசியமே இல்லை. அனைத்து தகவல்களும் நிறுவனம் தயாரித்த Spreadsheet-ல் உடனுக்குடன் பதிவு செய்யப்படும். விண்ணப்பம் பூர்த்தி செய்யப்பட்டால் அதைப்பற்றியதான் அறிவிப்பு ஒன்று மின்னஞ்சலாக அனுப்பப்பட்டு விடும்.இதனை பயன்படுத்திக்கொள்ளும் வழிமுறை இதோ 1. முதலில் உங்களுக்கு GOOGLE-ல் கணக்கு (Mail Id) இருக்க வேண்டும்.2. தற்போது, http://docs .google.com இணைய முகவரிக்குச் சென்று, பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் அளித்து உள்ளே செல்லவும்.3. முகப்பு பக்கத்தில் உள்ள, File - Forms-ஐ சொடுக்கவும்.4. ஒரு புதிய சட்டமொன்று தோன்றும்.இதுதான், நாம் அமைக்க வேண்டிய விண்ணப்ப படிவமாகும். கேள்விகளை சேர்ப்பதற்கு Add Question -பொத்தானை அழுத்தவும். எவ்வகையில் பதில்கள் அளிக்கப்பட வேண்டும் என்பதனை நிர்ணயிக்கவும் இந்த பொத்தான் நமக்கு உதவுகிறது. பொதுவாக கீழ்க்கண்ட வகையில் பதில்கள் அளிக்கப்படும்.1. ஒரு வரியிலான பதில் (Tent)2. பத்தி வடிவிலான பதில் (Paragraph)3. கொள்குறி வகை (Multiple choice)4. (Check Box)5. பட்டியலிலிருந்து தேர்ந்தெடுத்தல் (Choose from the listing)6. மதிப்பெண் இடுதல் (Scale 1-n)நீங்கள் கேட்க விரும்பும் கேள்வியினை, Question Title (கேள்வி தலைப்பு) பகுதியில் தட்டச்சு செய்யவும் அக்கேள்விக்கு உதவும் வகையிலான குறிப்பு ஏதாவது அளிக்க விரும்பினால், உதவிப்பகுதியில் (Help Text)அளிக்கவும். எவ்வகையான பதில்களை விரும்புகிறீர்களோ, அதற்கேற்றாற்போல், கேள்வி மாதிரி (Question Type)-யினை தேர்ந்தெடுக்கவும். உதாரணமாக, நீங்கள் தேர்ந்தெடுத்த கேள்வி மாதிரி பட்டியலிலிருந்து தேர்ந்தெடுத்தல் (Choose from a list)-ஆக இருப்பின், அப்பட்டியலில் தோன்ற வேண்டிய பதில்களையும் பூர்த்தி செய்ய வேண்டும். ஏதேனும் ஒரு கேள்விக்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டுமெனில், “Mark this a required Question” Check Box தேர்ந்தெடுக்கவும் (Select).
விண்ணப்பம் முழுவதுமாக தயார் செய்யப்பட்ட பின், முடிந்தது (Done) பொத்தானை சொடுக்கவும். தற்போது, முழுமையடைந்த விண்ணப்பத்தை திரையில் காணலாம். இந்த விண்ணப்பத்தினை, உங்களுடைய இணையத்தில் பதிய (Embed) More - action பொத்தானை சொடுக்கி Embed - பொத்தானை சொடுக்கவும். வரும், நிரல் (Code) பகுதியினை இணையப்பக்கத்தில் Paste -செய்து கொள்ளவும். இதே விண்ணப்பத்தினை, மின்னஞ்சலாக அனுப்பலாம். அதற்கு ‘Email this Form’-- பொத்தானை சொடுக்கவும். வரும், சட்டத்தில் மின்னஞ்சல் முகவரியினை அளித்து ‘Send’ பொத்தானை சொடுக்கவும்.பூர்த்தி செய்யப்படும், அனைத்து பதிவுகளும் தற்போது, நம்முடைய விண்ணப்பத்தில் ஒருங்கமைக்கப்பட்டுவிடும். புதிதாக பதிவு செய்யப்பட்டவை புதிய வண்ணத்தில் காண்பிக்கப்படும். ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் ஒரு புதிய இணைய முகவரி விண்ணப்பத்தின் அடிப்பகுதியில் காண்பிக்கப்படும். இதனை கொடுக்குவதன் மூலம், நேரடியாக அந்த விண்ணப்பத்திற்கு செல்லலாம். இனியென்ன, அனைத்து தகவல்களும் எவ்வித ஒரே இடத்தில் ஒருங்கமைக்கப்பட்டுவிட்டது. எவ்வித கால தாமதமும் இன்றி இலவசமாக வழங்கப்படும், இந்த இற்புத வசதியினை பயன்படுத்திக்கொள்வதினால், நமக்கு ஏராளமான நேரவிரயமும், பண விரயமும் தவிக்கப்பட்டு விடுகிறது. மக்கள் மத்தியில், ஊழியர்கள் மத்தியில், வாடிக்கையாளர் மத்தியில் என எல்லோரிடத்தும் திரட்டப்படும், சேகரிக்கப்படும் தொகுக்கப்படும், தகவல்களை இனி Google - Forms மூலம் பெற்று அதிக பயன்பெறுவோமாக.

http://www.tamilcafe.net

மடிக்கணினி வாங்கும் முன்தற்போது அனைத்துக் கணினிகளின் விலை மாபெரும் வீழ்ச்சியடைந்துள்ளது. உயர்தரமான அதிக வசதிகள், பயன்பாடுகள் கொண்ட கணினியைக்கூட இன்று மிகக் குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.
வழக்கமான நிலைக்கணினியை போலவே மடிக்கணினி இன்று மிகப்பரவலாகப் பயன்பட்டு வருகிறது. ஏறத்தாழ இரண்டின் விலையும் ஒரே அளவில் தான் இருக்கின்றன். அப்படியிருக்கையில் இன்னும் ஏன் நிலைக்கணினி? புறப்படுங்கள் மடிக்கணினிக்கு...மடிக்கணினி வாங்க தயாராகிவிட்டீர்கள் அல்லவா? இதோ மடிக்கணினி வாங்குவதற்கு முன்பான சில யோசனைகள்...
மடிக்கணினி வாங்கும் முன் முக்கியமாக கவனிக்க வேண்டியவை :
எடை மற்றும் அளவு
இணைப்புத்திறன்
மின்கலங்கள்
பாதுகாப்புத் தன்மை
மேம்பாட்டு வசதி
உத்தரவாதம் மற்றும் ஆதரவு
எடை மற்றும் அளவு
மடிக்கணினி வாங்குவதற்கான கருத்துருக்களில் மிக முக்கியமானது எடை மற்றும் அளவு. பல்வேறு இடங்களுக்கு தொடர்ந்து பயணித்து வருபவர் மெல்லிய மற்றும் எடை குறைவான மடிக்கணினிகளையே வாங்க வேண்டும். அதிக எடை கொண்டவற்றை எடுத்துச்செலவதும் பயன்படுத்துவதும் மிகக் கடினம். நிலைக்கணினிகளை இடம்பெயர்க்கும் மடிக்கணினி சிறந்ததுதான் என்றாலும் அதனை பயண நேரங்களில் பயன்படுத்துவது சற்று கடினமே.இணைப்புத்திறன்இணையம் மற்றும் அலுவலக வலைப்பின்னலில் இணைக்கும் இணைப்புத்திறனை அவசியம் பெற்றிருக்க வேண்டும். ஒரே நேரத்தில் பல இணைப்புகளை ஏற்கும் திறனை பெற்றிருப்பதோடு சில சமயங்களில் பங்கீட்டு இணைய வலைப்பின்னல் வசிதியை வழங்கவிருப்பதாகவும் இருக்க வேண்டும். Wi-Fi இணைப்புத்திறன் பெற்றிருப்பின் சாலச் சிறந்தது.மின்கலங்கள்
நடமாடும் அலுவலக பயனீட்டாளர்களுக்கு அதிக வாழ்நாள் தன்மை கொண்ட மின்கலங்களே பொருத்தமானதாகும். அதுமட்டுமில்லாது மற்றும் ஒரு மின்கலத்தை இணைக்கும் வசிதியும் இருக்க வேண்டும். மின்சார வசதி இல்லாத இடங்களிலும், பயணம் மேற்கொள்ளும் போதும் இது மிக உதவியாக இருக்கும். மேலும் மின்கலங்களை புத்துயிரூட்ட (RECHARGE ) ஆகும் நேரத்தையும் கருத்தில் கொண்டு வாங்க வேண்டும்.பாதுகாப்புத் தன்மைஇன்று அதிகம் களவுபோவது செல்லிடைப்பேசிகளை அடுத்து மடிக்கணினிகளே. ஆதலால் பாதுகாப்புத் தன்மைப் பற்றி அதிக அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டியது கட்டாயமாகிறது. மேம்பட்ட பாதுகாப்புத் தன்மை கொண்ட மடிக்கணினி நம்முடைய பணத்தையும் அச்ச உணர்வையும் பெருமளவு குறைக்கும்.மேம்பாட்டு வசதிதொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப நம்முடைய மடிக்கணினியையும் மேம்படுத்தும் வசதி மிகவும் அவசியமாகிறது. நினைவகம் (RAM MEMORY ), கொள்ளளவகம் (HARDDISK ), செயலகம் (PROCESSOR) போன்றவற்றை மேம்படுத்துவது மிக எளிமையானதாக இருக்க வேண்டும். உள்ளிணைந்த (On Board ) வசதி மேம்பாட்டு வசதியினை தடுத்து விடுவதால் அத்தகையவற்றை தவிர்ப்பது நல்லது. மேலும் அளவில் மிகச்சிறியவற்றை தேர்ந்தெடுப்பதினால், அதனை பயன்படுத்துவது கடினமானதாகவும் காயமேற்படுத்துவதாகும் இருப்பதினால் சற்று பெரிய மடிக்கணினிகளையே வாங்குவது நல்லது.உத்தரவாதம் மற்றும் ஆதரவு24x7 ஆதரவு அளிக்கும் நிறுவனத்திடம் மட்டிமே மடிக்கணினிகளை வாங்க வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு குறையாத உத்தரவாதம் மற்றும் ஆதரவு இருக்க வேண்டும்.பிரச்சனைக்குரிய அனைத்து பாகங்களையும் சரி செய்தோ அல்லது மாற்று பாகங்களை அளித்தோ ஏற்றிட வேண்டுமென்பதை வாங்கும்போதே உறுதி செய்துகொள்ள வேண்டும். பிரச்சனைகளுக்குத் தீர்வு உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலும் கிடைப்பின் மிகு நன்மையளிக்கும். நல்ல மடிக்கணினி வாங்கிட எங்களின் வாழ்த்துக்கள்!!!

Tuesday, December 29, 2009

நரமாமிசம் சாப்பிடும் மாந்திரீகர்களை படம் பிடித்து அவர்களை நாக சன்யாசிகள், அகோரிகள் என கூறிவது வருந்த தக்கது.

“நான் வங்காளத்தை ஆண்ட மன்னன், நான் இறந்த பிறகு எனது ஆட்சியை எனது மகனுக்கு கொடுக்காமல் எனது மைத்துனன் எடுத்து கொண்டான். பிரிடீஷ் வைஸ்ராய் இதில் தலையிட்டு நீதி வழங்க வேண்டும்”விசித்திரமான இந்த வழக்கை கண்டு நீதிபதி குழம்பினார். தான் இறந்துவிடேன் என சொல்லும் அரசன் உயிருடன் இருக்கிறான் என்றால் யாருக்கு தான் குழப்பம் வராது. நடந்தது இது தான்...வங்க தேசத்தின் கிழக்கு பகுதியை ஆண்டு வந்த அரசன் (ஜமீந்தார், குறுநில மன்னன் என்றும் சொல்லலாம்) சில தவறான பழக்கங்களால் இள வயதில் நோய் கண்டான். அரசு மருத்துவர்கள் எத்தனையோ மருத்துவம் செய்தும் அரசன் உடல் நலம் மிகவும் நலிவுற்றது. 25 ஆம் வயதில் வாழ்க்கையின் கடைசி நிலையில் இருந்தான் அந்த அரசன். மலைவாழ்ஸ்தலங்களில் இருந்தால் சிறிது காலம் வாழலாம் என மருத்துவர்கள் கூறினார்கள். அரசன் தனது ராணி, மூன்று வயது மகன் மற்றும் பரிவாரங்களுடன் டார்ஜலிங் சென்றான்.டார்ஜலிங் அப்பொழுது பிரிடீஷ் காலனி ஆதிக்கத்தில் இருந்தது. பிரிடீஷ்காரர்களுக்கு கப்பம் கட்டும் மன்னனாக இருந்ததால் அவர்களும் அரசனை வரவேற்றார்கள். அரசன் காலரா, பிளேக் போன்ற கொடுடிய நோய் கொண்டவனாக இருந்து அது பிறருக்கு பரவுமோ என ஐயம் கொண்ட பிரிடீஷ்காரகள் தங்கள் சார்பாக ஒரு மருத்துவரை கொண்டு மன்னனை பரிசோதித்தார்கள். அவருக்கு தொற்றகூடிய நோய் இல்லை என தெரிந்ததும் அனுமதித்து தங்கள் விருந்தினர் மாளிகையில் தங்குவதற்கு அனுமதித்தனர்.சில மாதங்களில் மன்னன் நோய் முற்றி இறந்தான். பிரிடீஷ் ஆதிக்க இடத்தில் இறந்ததால், அவர்களின் மருத்துவர் மன்னன் உடலை பரிசோதித்து இறப்பு சான்றிதழ் வழங்கினான். அரசனின் அரண்மனை வைத்தியரும் பரிசோதித்து மன்னன் இறந்ததை உறுதி செய்தார். மன்னனின் இறுதி சடங்கு கங்கை ஆற்றங்கரையோரம் டார்ஜலிங் அருகில் இருக்கும் ஒரு ஊரில் நடந்தது.உடலுக்கு மூன்று வயது மகன் நெருப்பு மூடிய சில நிமிடத்தில் திடீரென வெள்ள பெருக்கு ஏற்பட்டு உடல் ஆற்றில் அடித்து சென்றது. உடல் தகனம் செய்ய வந்தவர்கள் ஆற்றுவெள்ளத்தில் மிதந்து மீண்டார்கள். கணவன் இறந்த துக்கத்தில் அரண்மனை வந்த ராணி தனது மகனுக்கு முடிசூட்ட தயாரானாள். ஆனால் ராணியின் தம்பி ஆட்சியை கைபற்றினான். இருவரையும் துன்புறுத்தினான். மக்களை கொடுங்கோலனாக ஆட்சி செய்தான்.இதே சமயத்தில் காட்டின் ஒரு பகுதியில்..கங்கை கரையின் ஓரத்தில் அந்த யோகிகள் கூட்டம் வட்டமாக அமர்ந்திருந்தார்கள். தூரத்தில் ஆற்றில் ஒரு பிணம் மிதந்து வருவதை பார்த்த தலைமை யோகி சைகை செய்தார். பிற யோகிகள் அந்த உடலை ஆற்றில் இறங்கி கரை சேர்த்தார்கள். மார்பில் சில பகுதிகள் மட்டும் தீக்காயத்துடன் இருந்த உடலின் கபாலத்தை திறந்து சில மூலிகைகளை சேத்து மீண்டும் மூடினார்கள். தினமும் இரு யோகிகள் அந்த உடலுக்கு காவல் இருந்தார்கள். உடல் முழுவதும் சவரம் செய்யப்பட்டு தினமும் சில “ரகசியமான செயல்கள்” மூலம் அந்த உடல் புத்துயிர் ஊட்டப்பட்டது. சில நாட்களுக்கு பிறகு உடலில் சில அசைவுகள் வரத்துவங்கின. மெல்ல நடக்கவும், உணவு உற்கொள்ளவும் அந்த உடலுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டது. அந்த உடல் , தான் யார் என்ற எந்த உணர்வும் அற்ற நிலையில், இருபத்திஐந்து வயது குழந்தையாகவே வலம்வந்தது. பன்னிரெண்டு வருடங்கள் யோகிகளுக்கு உண்டான பயிற்சி அளிக்கபட்ட அந்த உடல் ஒரு கும்பமேளா நேரத்தில் யோகிகள் குழுவுடன் காட்டிலிருந்து நடக்க துவங்கியது. ஒர் இடத்தில் திடிரென டேரா அமைத்தார்கள். வட்டமாக பல மணி நேரம் யோகிகள் உட்கார்ந்து இருப்பது டேரா என அழைக்கிறார்கள். நெடுநாள் விருந்தாளிகள் நம் வீட்டில் தங்குவதை சொல்லுவோம் அல்லவா அதே வார்தை தான். யோகிகளின் குழு தலைவர் அந்த உடலை அழைத்து, சில யோக முறைகளை செய்து அவ்வுடலின் பழைய சம்பந்தத்தை மீண்டும் கொண்டுவந்தார்.உடல் மீண்டும் மன்னன் ஆகியது. மன்னன் செய்ய வேண்டிய வேலையை கூறி டேராவிலிருந்து அனுப்பி வைத்தார்.மன்னன் மீண்டும் தனது நாட்டிற்கு வந்து தனது ஆட்சியை கேட்க, மன்னனின் மைத்துனன் ஏதோ மந்திரவாதி மன்னன் உருவில் வ்ந்திருப்பதாக சொல்லி விரட்டினான். சிலரின் துணையோடு பிரிடீஷ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தான் மன்னன். நீதிபதி விசாரணையை துவக்கி, மன்னன் இறந்ததையும் - மீண்டும் உயிருடன் வந்ததையும் உறுதி செய்தார். மன்னனுக்கு எப்படி உயிர் வந்தது என நீதிபதி கேட்க மன்னன் விளக்கியது தான் நீங்கள் மேலே படித்த வரிகள். மன்னன் உடலாக இருக்கும் பொழுது யோகிகளுக்கு உதவியாக தானும் பிற உடலுக்கு காவலாக இருந்ததையும் கூறினான். வழக்கு மேல்முறையீட்டுக்காக லண்டனில் இருந்த உச்ச நீதி மன்றதிற்கு மாற்றபட்டது. அங்கும் மன்னன் உயிர் பெற்றான் என்றும், யோகிகள் உயிர் அளித்தார்கள் என்றும் நிரூபிக்கபட்டது.பிரிடீஷ்காரகள் மீண்டும் ஆட்சியை மன்னனிடம் கொடுத்தார்கள். பன்னிரெண்டு ஆண்டுகள் ஆட்சி செய்துவிட்டு வளர்ந்த மகனுக்கு முடிசூட்டி மீண்டும் யோகிகளுடன் சென்று இணைந்தான் மன்னன். மன்னிக்கவும் யோகி.மேற்கண்ட சம்பவத்தை நான் ஒரு யோகியிடம் இருந்து கேட்டு கதைவடிவில் தந்திருக்கிறேன். தகவல் உண்மையா என காண இங்கே இருக்கு சுட்டி இங்கே. சுட்டியில் உள்ள சம்பவங்கள் நீதிமன்ற விசாரணை தன்மையில் விவரிக்கபட்டுள்ளது..என்ன செய்ய...? சாட்சி கொடுத்தால் தானே நம் மக்கள் இங்கே அனைத்தையும் நம்புகிறார்கள்.இது போல எத்தனையோ சம்பவங்கள், நீதி மன்றத்தில் இது போன்ற விசித்திர வழக்குகள்.[திரு. ஷண்முகப்ரியன் கூறியது போல விமலானந்தா எனும் அகோரியின் வாழ்க்கை சம்பவம் கூட நீதிமன்றவழக்கு தான்]இப்படி பட்ட அசாத்திய ஆற்றல் கொண்ட அகோரிகளுக்கு ஒரு பழக்கம். தங்களை பிறர் கவனிக்கிறார்கள் என தெரிந்தால் அவர்கள் அருவெருக்க தக்க செயல்களை செய்வார்கள். அதன் பின் அவர்களை பார்த்து ஓடிவிட செய்வார்கள். தங்களை பிறர் பின் பற்றவேண்டும் என விரும்ப மாட்டார்கள் என்பதே இதற்கு காரணம். உதாரணமாக அவர்கள் பூஜை செய்வதை கவனிக்க ஆரம்பித்தால் மலம் மற்றும் சிறுநீரில் பூஜை செய்ய துவங்குவார்கள். ..!உங்கள் வைராகியத்தை நிரூபணம் செய்தால் அவர்களுடன் இணைத்து கொள்வார்கள். சிலர் இவர்கள் முன், தங்கள் உடல் உணர்வு இல்லாமல் வைராகியம் கொண்டிருக்கிறோம் என காட்ட பலர் தங்கள் பிறப்புறுப்பை கட்டையாலும், கம்பிகளாலும் பிணைத்து கொள்வார்கள். அப்படி பட்டவர்களை பார்க்கும் வெளிநாட்டுகாரர்களும் , நம் நாட்டுகாரர்களும் யோகிகளே அவ்வாறு இருப்பதாக நினைப்பார்கள். உண்மையில் இவர்கள் யோகிகளின் காலேஜுக்கு அட்மீஷன் கேட்பவர்கள் தான் யோகிகள் அல்ல.

http://2.bp.blogspot.com/_LxMf4fNflJE/SZxb4nVNR2I/AAAAAAAAAjU/NwgzJleb4Sc/s1600-h/viragya.jpg

நாக சன்யாசிகளுக்கு முன் தனது வைராக்யத்தை காண்பிக்கும் ஒருவர்.[ காலேஜ் அட்மீஷன் காட்சியை பார்த்தவுடன் கால்ககளை சேர்த்து உற்கார தோன்றுகிறதா?]காசி நகரத்தில் இவர்கள் வலம்வருவது உண்டு. காசி நகரம் ஆன்மீக நாட்டம் கொண்டர்களின் சரணாலயம். ஊருக்கு ஒரு மயானம் இருப்பது போல உலகிற்கே ஒரு மயானம் என்றால் அது காசி என சொல்லலாம். தினமும் சராசரியாக எழுநூறு முதல் ஆயிரம் பிணங்கள் எரிக்கப்படுகிறது. [என்னடா இது... காசியை பற்றி கூட தனி பதிவு போடலாம் போல இருக்கே..! ]சன்யாசிகள், யோகிகள், தாந்திரீகர்கள், மாந்திரீகம் செய்பவர்கள் என அங்கே கூட்டம் அதிகம். காக்கி சட்டையில் வரும் ஒருவர் வாட்சுமேனா அல்லது போலீஸா என தெரியாமல் முழிப்பவர்கள் போல, மக்கள் யோகிகளுக்கும் மாந்திரீகர்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் அனைவரையும் ஒரே தலைப்பில் அடைத்துவிடுவார்கள்.மேலைநாட்டுகாரர்களுக்கு இந்தியாவில் நரமாமிசம் சாப்பிடும் மாந்திரீகர்களை படம் பிடித்து அவர்களை நாக சன்யாசிகள், அகோரிகள் என கூறிவது வருந்த தக்கது.ஒரு பதிவர்கூட அகோர பசியால் மனித உடலை திண்பவர்கள் அகோரிகள் என பதிவிட்டுருந்தார். அதை கண்டு மனம் வருந்தாமல் இருக்க முடியவில்லை. வீடியோவிலோ அல்லது இது போன்ற பதிவையோ படிக்க நேர்ந்தால் யோகிகளை மாந்திரீகர்கள் இடமிருந்து வித்தியாசம் காட்ட சில தன்மைகளை கூறிகிறேன். யோகிகளின் லட்சணங்கள் :யோகிகள் மயானத்தில் தியானம் செய்வார்கள், எரியும் உடல் மேல் அமர்ந்து தியானிப்பார்கள். ஆனால் மனித உடலை உண்ணமாட்டார்கள். உணவு தேவை என்பதே இவர்களுக்கு இல்லை என்பது தான் உண்மை. சில மூலிகைகளை வைத்து கொண்டு பசியற்ற நிலையில் இருக்கிறார்கள். உடலில் எந்த ஒரு மத சின்னங்களோ அடையாளமோ இருக்காது. ருத்திராட்சம் , சங்கு மற்றும் ஆயுதம் இவற்றில் ஏதாவது ஒன்று கைகளில் வைத்திருப்பார்கள். ஆபரணம், மோதிரம் அணிய மாட்டார்கள். தலை மூடி நீண்டு இருக்குமே தவிர முகத்திலும், மார்ப்பிலும் முடி இருக்காது. கெளபீணமோ அல்லது நிர்வாணமாகவோ இருப்பார்கள். உடை உடுத்துவது இவர்கள் மரபு அல்ல. சுடுகாட்டு சாம்பலை கும்பமேளா தவிர பிற நாட்களில் / இடங்களில் பூச மாட்டார்கள்.

http://4.bp.blogspot.com/_LxMf4fNflJE/SZxcby6itSI/AAAAAAAAAjc/IbvqAYT725E/s1600-h/bigners.jpg

கும்ப மேளாவில் ஆரம்ப நிலை யோகிகளின் அணி வகுப்புகடந்த சில பதிவுகளாக யோகிகளை பற்றி எனக்கு தெரிந்தவற்றை பகிர்ந்து கொண்டேன். எனக்கும் அவர்களுக்கும் நடந்த பல சுவையான சம்வங்கள், தமிழகத்தில் இவர்கள் இருக்கும் இடங்கள் பற்றி விரிவாக எழுத முடியவில்லை. மற்றொரு சந்தர்ப்பத்தில் எழுதுகிறேன்.அமானுஷ தன்மையை கூறியும், யோகிகள் உயர்ந்தவர்கள் என கூறியும் இவர்களை பின்பற்ற சொல்லுவதற்காக நான் இந்த பதிவு இடவில்லை. இவர்களை பின்பற்ற சொல்லுவது கூட இவர்களுக்கு பிடிக்காது என்பதே உண்மை. இவர்களை வணங்க தேவையில்லை குறைந்த பட்சம் அசிங்கப்படுத்தாமல் இருக்க முயற்சிப்போம்.