Thursday, December 31, 2009

பக்தியைப் போதித்த சித்தர்கள்


சித்தர்கள் என்றாலே உலகவாழ்வைத் துச்சமென மதித்து சிந்தனை அனைத்தையும் சிவனுக்குத் தந்தவர்கள்.சித்தர்கள் ஏராளமானோர் இருந்தாலும் பதினெட்டுச் சித்தர்கள் என்று வரையறுப்பது மர<பு. அவர்கள் பல்வேறு காலகட்டங்களில் வாழ்ந்தவர்கள் . சித்தர்களைப் பதினெட்டு என்ற எண்ணிக்கையில் அடக்கிவிட முடியாது. இன்றும் காடுகளிலும், மலைகளிலும் சித்தர்கள் வாழ்ந்து வருவதாக சொல்கிறார்கள். சித்தர்கள் வெறும் துறவு வாழ்க்கை மட்டும் வாழாது ஆன்மிகத்தில் புதுமை பலவும் புகுத்த அரும்பாடு பட்டுள்ளனர். "நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்'என்று நமக்கு ஞானதீபம் காட்டுகிறார்' சிவவாக்கிய சித்தர். "நாதனாகிய இறைவன் நம் உள்ளத்தில் உறைந்திருக்கிறான். அவனைக் கல்லிலும் செம்பிலும் ஏன் தேடுகிறீர்கள்?' என்று வினாவினைத் தொடுக்கிறார். நடமாடுங் கோயிலாகிய மனிதனுக்கு உதவினாலே மகேசனுக்கு உதவியதாக திருமூலர் திருமந்திரத்தில் குறிப்பிடுகிறார். வெறும் மருந்துகளையும், தகரத்தை தங்கமாக்குவது போன்ற வித்தைகளையும், மட்டும் வலியுறுத்தாது, பக்தியையும், நல்ல பண்பையும், அறநெறிமுறை களையும் போதித்த பெருமை சித்தர் மரபிற்கு உண்டு

No comments:

Post a Comment