தேசிய அறிவுசார் ஆணையம்இந்திய அரசு
இந்தியாவில் போட்டிநிறைந்த இச் சூழலில் பல்வேறு துறைகளில் பொருளாதார முன்னேற்றத்தைக் கொண்டுவர புதுமைகளை நடமுறைப்படுத்துவதே தேசிய அறிவுசார் ஆணையத்தின் நோக்கமாகும்.இதனை நிறைவேற்ற, தரவுகளைச் சேகரிக்க, இது தொடர்பான கருத்துக்களைப் பெற, தேசிய அறிவுசார் ஆணையம் ஒரு ஆய்வை மேற்கொண்டுள்ளது.:
பெரிய நிறுவனங்கள் - உற்பத்தி மற்றும் சேவை
சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்
வேளாண்மைத்துறை மிகப்பெரிய தொழில் நிறுவனங்களுக்காக NKC ஒரு கேள்வித்தாள் பட்டியலை உருவாக்குகிறது. இந்தக் கேள்வித்தாளில் சுதந்திரமயமாதலுக்கு முன் அல்லது பின் அந்த நிறுவ்னங்கள் புதுமைகளைப் புகுத்தியது தொடர்பான கேள்விகள் இருந்தன. இதற்கான பதில்களை நாட்டில் உள்ள அனைத்து CEO தொழில்நிறுவனங்களிடம் இருந்து எதிர்ப்பார்கின்றது. இதே போலக் கேள்வித்தாள் சிறிய மற்றும் சற்று பெரிய தொழில்நிறுவனங்களுக்கும் உருவாக்கப்பட்டது மட்டுமல்லாது தொடர்ந்து இத்தொழில்களில் உள்ள பிரச்சனைகளைக் களைவது தொடர்பாக பணிப்பட்டறைகளும் நடத்தப்பட்டன. வல்லுநர்களிடம் விவசாயத்துறை பற்றியும் நேர்காணல் நடத்தப்பட்டது.இதன் வெளிப்பாடாக ஒரு எளிமையான கையேடு ஒன்று "Applying Innovation for Growth and Competitiveness", கிடைத்தது. இதைப் பற்றிய அறிக்கை பிரதமருக்கு அனுப்பபட்டது.
No comments:
Post a Comment