Tuesday, August 10, 2010

அமில மழை

காற்று மாசுபாட்டின் ஒரு விளைவுதான் ’அமில மழை’. எரிமழை சீறும்போதும், வானில் மின்னல் வெட்டும் போதும் ’சல்பர் டைஆக்சைடும்’, நைட்ரஜன் ஆக்சைடுகளும்,இயற்க்கையாக உருவாகின்றன. பெட்ரோல், டீசல் போன்ற வாகனங்கள், எந்திரங்களில் எரிக்கப்படும் போதும், கனரகத் தொழிற்சாலையிலிருந்தும் ‘ஆக்சைடுகள்’வெளிப்படுத்தப்படுகின்றன. இந்த ‘ஆக்சைடுகள்’ தண்ணீருடன், வளிமண்டலத்தில் உள்ள பிற வேதிப்பொருட்களுடன் வினைபுரிகின்றன. அப்பொது கந்தக அமிலம், நைட்ரிக அமிலம் மற்றும் பிற அமில படிவுகள் உருவாகின்றன. இந்த மாசுகள் காற்றினால் வெகு தூரத்துக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. கடைசியில் அவை அமில மழையாகவும்,பனிமூட்டமாகவும்,புகையாகவும்,அமிலப் பொழிவாகவும் பூமிக்குத் திரும்பி வருகின்றன.
’பிஎச்’ அளவு கோளில் அமில மழை 0 முதல் 5 வரை அளவிடப்படுகிறது.அமில மழை பூமியின் மண்வளம் ,தண்ணீர்,வன உயிரினங்கள்,கட்டிடங்க்ள் மட்டுமின்றி மனிதர்களின் ஆரோக்கியத்தையும் பாதிக்கின்றன.


by
அறிவுக்குச் சில தகவல்கள்

No comments:

Post a Comment