Tuesday, August 10, 2010

ஆண்டுதோறும் 1,500 சதுர கி.மீ. இழந்து வரும் அமேசான் காடுகள்

பெரூவின் காடுகள் அழிப்புத் திட்டங்களாலும், சுற்றுச்சூழல் நாசத்தினாலும் ஆண்டொன்றுக்கு அமேசான் காடுகள் 1,500 சதுர கிலோ மீட்டர்கள் பரப்பளவுக்கு மழைக்காடுகளை இழந்து வருகிறது.

அமேசான் மழைக்காடுகளில் 2,62,550 சதுர மைல்கள் பெரூ பகுதியில் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் துறைமுக நகர் கல்லாவோவின் பரப்பளவைக் காட்டிலும் 10 மடங்கு மழைக்காடுகள் இழக்கப்படுவதால் சுற்றுச்சூழல் பேராபத்தை நோக்கி அமேசான் காடுகள் சென்று கொண்டிருப்பதாக சுற்றுசூழல் செயல் வீரர்கள் எச்சரித்துள்ளனர்.

மழைக்காடுகளின் மண் நாசப்படுத்தப்படுவது அல்லது ரசாயனமயமாக்கப்படுவது வெப்ப வாயு வெளியேற்றத்தில் 42% பங்களிப்பு செய்து வருகிறது.

அமேசான் காடுகளில் வசிக்கும் பெரும்பாலான ஆதிவாசிகளின் வாழ்க்கை பேராபத்தைச் சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அங்குள்ள சுற்றுச்சூழல் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

பொதுச்சேவைகளும் இல்லாமல், அரசு உதவியும் இல்லாமல் மழைக்காடுகளில் தங்களின் வாழ்வாதாரத்திற்காக மரம் வெட்டி பிழைப்பு நடத்தி வரும் ஆதிவாசிகள் அறிவர் மரம் வெட்டுவதும் சுற்றுச் சூழலுக்கு ஆபத்து என்பதை.

No comments:

Post a Comment