Monday, June 7, 2010

மாதுளம் பழம் - மருத்துவ பலன்


ஆக்ஸிஜனேற்றத்தைத் தடுப்பதில் மாதுளம் பழம் முக்கியப் பங்காற்றுகிறது என்பதை பல்வேறு நாளிதழ்களும், மருத்துவ இதழ்களும் வெளியிட்டு மாதுளம் பழத்தின் புகழை மேலும் பிரபலப்படுத்தி விட்டன. கருஞ்சிவப்பு நிறத்தில் காட்சி தரும் மாதுளம் பழத்தின் அளவிடற்கரிய சத்துகளையும்,

மருத்துவ பலன்களையும் சொல்லி மாளாது.

தற்போது ஹோட்டல்கள், ஜூஸ் கடைகள், விருந்து-விழா நிகழ்ச்சிகள் என எல்லா இடங்களிலும் மாதுளம் பழ ஜூஸ்-க்கு தனியிடம் கிடைத்துள்ளது. உணவுத் துறையில் தற்போது மாதுளம் பழத்தை `சூப்பர் புரூட்’ என அழைக்கிறார்கள்.

ஆக்ஸிஜனேற்ற சக்தியை உடலுக்கு அளிப்பதில் மாதுளம் பழம் மிகப்பெரிய பங்காற்றுகிறது. முன்கூட்டியே வயோதிகம் ஏற்படுவதையும் மாதுளம் பழம் தடுக்கிறது. உடலில் உள்ள கொழுப்புச் சத்துகளை குறைப்பதிலும், இதயத்திற்கு உகந்த எண்ணற்ற பலன்களை அளித்து, இதய நோய்களைத் தடுப்பதிலும் இதன் மருத்துவ குணம் குறிப்பிடத்தக்க பங்கினை ஆற்றுகிறது.

அன்றாடம் மாதுளம் பழ ஜூஸ் அருந்தி வர, ஆண்களுக்கான ஆக்ஸிஜனேற்றத்தை அது சீராக்கும் என்றும், பெண்களைப் பொறுத்தவரை மார்பகப் புற்று நோயை உருவாக்கும் செல்களை மாதுளம் பழம் அழிக்கும் தன்மை கொண்டது என்றும் தெரிய வந்துள்ளது. மேலும் சிறுநீர்ப் பையை சுற்றியுள்ள ப்ரோஸ்டேட் சுரப்பி புற்றுநோய் செல்களையும் அழிக்கும் தன்மை மாதுளம் பழத்திற்கு உண்டு என கண்டறியப்பட்டுள்ளது


news by www.tamilcnn.com.

No comments:

Post a Comment