Wednesday, December 30, 2009

Google Forms


பொதுவாக வாடிக்கையாளர்களின் கருத்தைப் பெறுவதற்கு அவர்களிடத்தே ஒரு விண்ணப்பம் கொடுக்கப்பட்டு பூர்த்தி செய்து கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படும். மேலும், அவர்களின் விமர்சனத்தை பதிவு செய்வதற்கும் அல்லது பரிந்துரைகளை பதிவு செய்வதற்கும் மேற்கூறிய அதே வழியினையே பயன்படுத்திக் கொள்ளப்படும். இவ்வாறு திரட்டப்படும் தகவல்களின் அடிப்படையில் நிறுவனங்கள் தங்களது அடுத்தக்கட்ட நடவடிக்கையினை, செயல்பாட்டினை மேற்கொள்ளுகின்றன. இதற்கு அதிக மனித உழைப்பு தேவைப்படுகிறது. குறிப்பாக, திரட்டப்பட்ட / சேகரிக்கப்பட்ட தகவல்களை ஒருங்கமைக்கும் பணி தான் மிகக்கடினமான பணியாகும். அதாவது, தனித்தனியாக இருக்கும் விண்ணப்பங்களிலிருந்து தகவல்களை ஒரு பொது இடத்தில் பதிவுசெய்ய வேண்டும். இவ்வாறு, அனைத்து விண்ணப்பங்களின் தகவல்களும் ஒருங்கே ஒரு இடத்தில் பதிவு செய்த பிறகுதான், நிறுவனங்கள், அத்தகைய தகவல்களை உரிய வழியில் / முறையில் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதற்கு மிகச்சிறந்த உதாரணம், நம்முடைய ஓட்டு முறை. அதிலும் குறிப்பாக முந்தைய தாள் ஓட்டு முறை (Paper Voting). பல ஊர்களிலிருந்து சேகரிக்கப்பட்ட வாக்குச்சீட்டுகள் ஒரு பொது இடத்தில் கொட்டி அந்தந்த வட்ட, மாவட்ட தலைமையங்களில் கொட்டி ஒவ்வொன்றாக கணக்கிடப்படும். இந்த கணக்கீடுகள் அந்த தொகுதிக்குட்பட்ட அனைத்து தேர்தல் தலைமையகங்களிலும் நடைபெறும். இறுதியில் அனைத்து தேர்தல் தலைமையங்களிலும் ஓட்டுக்களின் எண்ணிக்கை வரைவுபடுத்தப்பட்டு அதிக ஓட்டுக்களைப் பெற்றவர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவர். இதில், மிகக் கடினமானது, தனித்தனியான ஓட்டுக்களை கணக்கிலெடுத்து அந்தந்த வேட்பாளர் பெற்ற மொத்த எண்ணிக்கையை அறிவதுதான். இதனை மிக எளிதாக எதிர் எதிர்கொள்வதற்கு ஏதேனும் மார்க்கமிருக்கறதா?
சுற்றுலா செல்ல வசதியேற்படுத்திக் கொடுக்கும் நிறுவனமொன்று, தங்களுடைய வாடிக்கையாளர்களின் தகவல்களை திரட்டி, அதற்கேற்றாற் போல், பயண வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும். உதாரணத்திற்கு, கீழ்க்கண்ட தகவல்கள் பொதுவாக திரட்டப்படும்.1. பெயர்2. பெரியவர் எண்ணிக்கை3. சிறியவர் எண்ணிக்கை4. உணவு (சைவம் / அரைவம்)5. விருப்ப உணவு (ஞாயிறு சிற்றுண்டி)6. சிறப்புத் தேவை7. தொலைபேசி எண்.இவை ஒருங்கமைக்கப்பட்டு பின் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால், இத்தகைய ஒருங்கமைத்தலுக்கு அதிக மனித உழைப்பும், நேரமும் தவிர்க்க முடியாததாக இருக்கிறது. இதனை எளிதாக எதிர்கொள்ள ஏதேனும் வழி இருக்கிறதா?ஏராளமான பயனீட்டாளர் வசதிகளை அள்ளி வழங்கும் GOOGLE-தற்போது GOOGLE DOCS - பகுதியில் ஒரு புதிய வசதியினை அறிமுகப்படுத்தியுள்ளது.அது தான், FORMS - பகுதியாகும். கேள்வி - பதில் வடிவிலாக அமைக்கப்படும் இத்தகைய விண்ணப்பங்களை வாடிக்கையாளர்கள் தங்களுடைய வீட்டிலிருந்தபடியே பூர்த்தி செய்து விடலாம். நிறுவனங்களுக்கு நேரடியாகவோ (அ) தொலைபேசியிலோ தெரிவிக்க வேண்டிது அவசியமே இல்லை. அனைத்து தகவல்களும் நிறுவனம் தயாரித்த Spreadsheet-ல் உடனுக்குடன் பதிவு செய்யப்படும். விண்ணப்பம் பூர்த்தி செய்யப்பட்டால் அதைப்பற்றியதான் அறிவிப்பு ஒன்று மின்னஞ்சலாக அனுப்பப்பட்டு விடும்.இதனை பயன்படுத்திக்கொள்ளும் வழிமுறை இதோ 1. முதலில் உங்களுக்கு GOOGLE-ல் கணக்கு (Mail Id) இருக்க வேண்டும்.2. தற்போது, http://docs .google.com இணைய முகவரிக்குச் சென்று, பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் அளித்து உள்ளே செல்லவும்.3. முகப்பு பக்கத்தில் உள்ள, File - Forms-ஐ சொடுக்கவும்.4. ஒரு புதிய சட்டமொன்று தோன்றும்.இதுதான், நாம் அமைக்க வேண்டிய விண்ணப்ப படிவமாகும். கேள்விகளை சேர்ப்பதற்கு Add Question -பொத்தானை அழுத்தவும். எவ்வகையில் பதில்கள் அளிக்கப்பட வேண்டும் என்பதனை நிர்ணயிக்கவும் இந்த பொத்தான் நமக்கு உதவுகிறது. பொதுவாக கீழ்க்கண்ட வகையில் பதில்கள் அளிக்கப்படும்.1. ஒரு வரியிலான பதில் (Tent)2. பத்தி வடிவிலான பதில் (Paragraph)3. கொள்குறி வகை (Multiple choice)4. (Check Box)5. பட்டியலிலிருந்து தேர்ந்தெடுத்தல் (Choose from the listing)6. மதிப்பெண் இடுதல் (Scale 1-n)நீங்கள் கேட்க விரும்பும் கேள்வியினை, Question Title (கேள்வி தலைப்பு) பகுதியில் தட்டச்சு செய்யவும் அக்கேள்விக்கு உதவும் வகையிலான குறிப்பு ஏதாவது அளிக்க விரும்பினால், உதவிப்பகுதியில் (Help Text)அளிக்கவும். எவ்வகையான பதில்களை விரும்புகிறீர்களோ, அதற்கேற்றாற்போல், கேள்வி மாதிரி (Question Type)-யினை தேர்ந்தெடுக்கவும். உதாரணமாக, நீங்கள் தேர்ந்தெடுத்த கேள்வி மாதிரி பட்டியலிலிருந்து தேர்ந்தெடுத்தல் (Choose from a list)-ஆக இருப்பின், அப்பட்டியலில் தோன்ற வேண்டிய பதில்களையும் பூர்த்தி செய்ய வேண்டும். ஏதேனும் ஒரு கேள்விக்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டுமெனில், “Mark this a required Question” Check Box தேர்ந்தெடுக்கவும் (Select).
விண்ணப்பம் முழுவதுமாக தயார் செய்யப்பட்ட பின், முடிந்தது (Done) பொத்தானை சொடுக்கவும். தற்போது, முழுமையடைந்த விண்ணப்பத்தை திரையில் காணலாம். இந்த விண்ணப்பத்தினை, உங்களுடைய இணையத்தில் பதிய (Embed) More - action பொத்தானை சொடுக்கி Embed - பொத்தானை சொடுக்கவும். வரும், நிரல் (Code) பகுதியினை இணையப்பக்கத்தில் Paste -செய்து கொள்ளவும். இதே விண்ணப்பத்தினை, மின்னஞ்சலாக அனுப்பலாம். அதற்கு ‘Email this Form’-- பொத்தானை சொடுக்கவும். வரும், சட்டத்தில் மின்னஞ்சல் முகவரியினை அளித்து ‘Send’ பொத்தானை சொடுக்கவும்.பூர்த்தி செய்யப்படும், அனைத்து பதிவுகளும் தற்போது, நம்முடைய விண்ணப்பத்தில் ஒருங்கமைக்கப்பட்டுவிடும். புதிதாக பதிவு செய்யப்பட்டவை புதிய வண்ணத்தில் காண்பிக்கப்படும். ஒவ்வொரு விண்ணப்பத்திற்கும் ஒரு புதிய இணைய முகவரி விண்ணப்பத்தின் அடிப்பகுதியில் காண்பிக்கப்படும். இதனை கொடுக்குவதன் மூலம், நேரடியாக அந்த விண்ணப்பத்திற்கு செல்லலாம். இனியென்ன, அனைத்து தகவல்களும் எவ்வித ஒரே இடத்தில் ஒருங்கமைக்கப்பட்டுவிட்டது. எவ்வித கால தாமதமும் இன்றி இலவசமாக வழங்கப்படும், இந்த இற்புத வசதியினை பயன்படுத்திக்கொள்வதினால், நமக்கு ஏராளமான நேரவிரயமும், பண விரயமும் தவிக்கப்பட்டு விடுகிறது. மக்கள் மத்தியில், ஊழியர்கள் மத்தியில், வாடிக்கையாளர் மத்தியில் என எல்லோரிடத்தும் திரட்டப்படும், சேகரிக்கப்படும் தொகுக்கப்படும், தகவல்களை இனி Google - Forms மூலம் பெற்று அதிக பயன்பெறுவோமாக.

http://www.tamilcafe.net

No comments:

Post a Comment