ஆரூர் தில்லை அம்பலம் வல்லந்
நல்லம் வடகச்சியும் அச்சிறுபாக்கம் நல்ல
கூரூர் குடவாயில் குடந்தை வெண்ணி
கூரூர் குடவாயில் குடந்தை வெண்ணி
கடல்சூழ் கழிப் பாலை தென்கோடி பீடார்
நீரூர் வயல் நின்றியூர் குன்றியூருங்
நீரூர் வயல் நின்றியூர் குன்றியூருங்
குருகா வையூர் நாரையூர் நீடுகானப்
பேரூர் நன்னீள் வயல் நெய்த்தானமும்
பேரூர் நன்னீள் வயல் நெய்த்தானமும்
பிதற்றாய் பிறைசூடிதன் பேரிடமே.
அண்ணாமலை ஈங்கோயும் அத்தி முத்தாறு
அகலா முதுகுன்றம் கொடுங்குன்றமும்
கண்ணார் கழுக்குன்றம் கயிலை கோணம்
கண்ணார் கழுக்குன்றம் கயிலை கோணம்
பயில் கற்குடி காளத்தி வாட்போக்கியும்
பண்ணார் மொழி மங்கையோர் பங்குடையான்
பண்ணார் மொழி மங்கையோர் பங்குடையான்
பரங்குன்றம் பருப்பதம் பேணி நின்றே.
எண்ணாய் இரவும் பகலும் இடும்பைக்
எண்ணாய் இரவும் பகலும் இடும்பைக்
கடல் நீந்தலாங் காரணமே.
அட்டானம் என்றோதிய நாலிரண்டும் அழகன்
உறைகா அனைத்துந் துறைகள்
எட்டாந் திருமூர்த்தியின் காடொன்பதுங் குளமூன்றும்
எட்டாந் திருமூர்த்தியின் காடொன்பதுங் குளமூன்றும்
களம் அஞ்சும் பாடி நான்கும்
மட்டார் குழலாள் மலை மங்கை பங்கன்
மட்டார் குழலாள் மலை மங்கை பங்கன்
மதிக்கும் இடமாகிய பாழி மூன்றும்
சிட்டானவன் பாசூர் என்றே விரும்பாய்
சிட்டானவன் பாசூர் என்றே விரும்பாய்
அரும்பாவங்கள் ஆயின தேய்ந்தறவே.
அறப்பள்ளி அகத்தியான்பள்ளி வெள்ளைப் பொடிப்
பூசி ஆறணிவான் அமர் காட்டுப்பள்ளி
சிறப்பள்ளி சிராப்பள்ளி செம்பொன் பள்ளி
சிறப்பள்ளி சிராப்பள்ளி செம்பொன் பள்ளி
திருநனி பள்ளி சீர்மகேந்திரத்துப்
பிறப்பில்லவன் பள்ளி வெள்ளச் சடையான்
பிறப்பில்லவன் பள்ளி வெள்ளச் சடையான்
விரும்பும் மிடைப் பள்ளி வண்சக்கர மால்
உறைப்பாலடிபோற்றக் கொடுத்த பள்ளி
உறைப்பாலடிபோற்றக் கொடுத்த பள்ளி
உணராய் மடநெஞ்சமே உன்னி நின்றே.
மனவஞ்சர் மற்றோட முன்மாதராரும் மதிகூர்
திருக்கூடலில் ஆலவாயும்ஆறை வடமாகறல்
அம்பர் ஐயாறு அணியார் பெருவேளூர் விளமர்
அம்பர் ஐயாறு அணியார் பெருவேளூர் விளமர்
தெங்கூர் சேறை துலை புகலூர்
அகலாதிவை காதலித்தான் அவன்சேர் பதியே
·· ··
·· ··
இன வஞ்சொல் இலா இடைமாமருதும்
இரும்பைப் பதி மாகாளம் வெற்றியூரும்
கனமஞ்சின மால் விடையான் விரும்புங்
கனமஞ்சின மால் விடையான் விரும்புங்
கருகாவூர் நல்லூர் பெரும்புலியூர்
தனமென் சொலிற்றஞ்சம் என்றே நினைமின்
தனமென் சொலிற்றஞ்சம் என்றே நினைமின்
தவமாம் மலமாயின தான் அறுமே.
மாட்டூர் மடப்பாச்சிலாச் சிராமம் முண்டீச்சரம்
வாதவூர் வாரணாசி காட்டூர் கடம்பூர்
படம்பக்கங் கொட்டுங் கடல் ஒற்றியூர் மற்று
உறையூர் அவையும் கோட்டூர் திருவாமாததூர்
கோழம்பமுங் கொடுங்கோவலூர் திருக்குணவாயில்
படம்பக்கங் கொட்டுங் கடல் ஒற்றியூர் மற்று
உறையூர் அவையும் கோட்டூர் திருவாமாததூர்
கோழம்பமுங் கொடுங்கோவலூர் திருக்குணவாயில்
··
·· குலாவு திங்கட் சடையான் குளிரும் பரிதி நியமம்
போற்றூர் அடியார் வழிபாடு ஒழியாத் தென்புறம்பயம்
போற்றூர் அடியார் வழிபாடு ஒழியாத் தென்புறம்பயம்
பூவணம் பூழியூரும் காற்றூர் வரையன் றெடுத்தான்
முடிதோள் நெரித்தான் உறைகோயில் என்று நீ கருதே.
முடிதோள் நெரித்தான் உறைகோயில் என்று நீ கருதே.
நெற்குன்றம் ஓததூர் நிறைநீர் மருகல்
நெடுவாயில் குறும்பலா நீடுதிரு
நற்குன்றம் வலம்புரம் நாகேச்சரம் நளிர்சோலையுஞ்
நற்குன்றம் வலம்புரம் நாகேச்சரம் நளிர்சோலையுஞ்
சேனை மாகாளம் வாய்மூர்
கற்குன்றம் ஒன்றேத்தி மழைதடுத்த
கடல்வண்ணனும் மாமலரோனுங் காணாச்
சொற்கென்றுந் தொலைவிலாதான் உறையும்
குடுமூக்கென்று சொல்லிக் குலாவுமினே.
குத்தங்குடி வேதிகுடி புனல்சூழ் குருந்தங்குடி
தேவன்குடி மருவும்
அத்தங்குடி தண்டிரு வண்குடியும் அலம்புஞ்
அத்தங்குடி தண்டிரு வண்குடியும் அலம்புஞ்
சலந்தன் சடை வைத்துகந்த
நித்தன் நிமலன் உமையோடுங்கூட நெடுங்காலம்
நித்தன் நிமலன் உமையோடுங்கூட நெடுங்காலம்
உறைவிடம் என்று சொல்லாப்
புத்தர் புறங்கூறிய புன்சமணர் நெடும்பொய்களை
புத்தர் புறங்கூறிய புன்சமணர் நெடும்பொய்களை
விட்டு நினைந்துய்ம்மினே.
அம்மானை அருந்தவமாகி நின்ற அமரர்
பெருமான் பதியான உன்னிக்
கொய்ம்மா மலர்ச் சோலை குலாவு கொச்சைக்
கொய்ம்மா மலர்ச் சோலை குலாவு கொச்சைக்
கிறைவன் சிவஞான சம்பந்தன் சொன்ன
இம்மாலை ஈரைந்தும் இருநிலத்தில் இரவும்
இம்மாலை ஈரைந்தும் இருநிலத்தில் இரவும்
பகலும் நினைந்தேத்தி நின்று
விம்மா வெருவா விரும்பும் அடியார்
விம்மா வெருவா விரும்பும் அடியார்
விதியார் பிரியார் சிவன் சேவடிக்கே.
திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment